Advertisment

Tamil News Highlights: டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான தமிழக அரசின் தனித் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பு

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக அரசின் பட்ஜெட் : சட்டசபையில் 19 ஆம் தேதி தாக்கல்?

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருந்து வந்த நிலையில் நேற்றைய விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

ஒகேனக்கல் நீர்வரத்து: ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து நேற்று காலை 5500 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது. 

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 09, 2024 22:07 IST

    இ.பி.எஸ் இனிமேலாவது உண்மைகளைப் பேசி பழக வேண்டும் - ஸ்டாலின் கடும் தாக்கு

    டங்ஸ்டன் விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும், புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டுநொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • Dec 09, 2024 22:00 IST

    ‘டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது’ - ஸ்டாலின் கடும் தாக்கு

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க செய்த துரோகம், வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும் ‘நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை’ என தம்பிதுரை மழுப்பியுள்ளார். அ.தி.மு.க-வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது” என்று அ.தி.மு.கவை கடுமையாகத் தாக்கியுள்ளார்.



  • Advertisment
    Advertisement
  • Dec 09, 2024 21:05 IST

    யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியீடு 

    யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியானது. யு.பி.எஸ்.சி 2ம் கட்ட தேர்வு முடிவுகளை http://upsconline.nic.in
    என்ற இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட்டது. 



  • Dec 09, 2024 21:03 IST

    தம்பிதுரை டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப் பற்றி பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத் திருத்தத்தை ஆதரித்துதான் தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப் பற்றி பேசவில்லை” என்று தெரிவித்துள்ளார்.



  • Dec 09, 2024 21:00 IST

    மன்னார்குடி அருகே கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து; அத்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கத்த்யால் குத்திவிட்டு தப்பியோடி அத்தை மகன் மகாதேவனை போலீசார் தேடி வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணவி திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Dec 09, 2024 20:13 IST

    திருவண்ணாமலை தீபத் திருவிழா; 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடப்படும் - கலெக்டர் அறிவிப்பு

    திருவண்ணாமலை தீபத் திருவிழாவை ஒட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ல 3 டாஸ்மாக் கடைகள் வரும் 12-ம் தேதி முதல் 3 நாட்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.



  • Dec 09, 2024 19:03 IST

    ஃபீஞ்சல் புயல் பாதிப்பு: பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை

    ஃபீஞ்சல் புயல் பாதிப்பால் மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் சான்றிதழ் கோரி அரசு தேர்வுகள் இயக்கத்தில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.



  • Dec 09, 2024 18:31 IST

    முதல்வருக்கு எம்பி சு.வெங்கடேசன் நன்றி 

    டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தமிழ்நாட்டின் வளத்தையும் வரலாற்றையும் அழிக்கும் முயற்சிகளை ஒன்றிணைந்து முறியடிப்போம் என எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.



  • Dec 09, 2024 18:23 IST

    அநீதிக்கு எதிராக எனது குரல் ஒலிக்கும்: ஆதவ் அர்ஜுனா

    ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் .என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.



  • Dec 09, 2024 17:42 IST

    இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

    இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளராக இருக்கும், சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார், தற்போதைய ஆளுனர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.



  • Dec 09, 2024 17:24 IST

    மாஞ்சா நூல் - நூலிழையில் உயிர் தப்பிய கோவை தம்பதி

    கோவையில் பட்டத்தின் மாஞ்சா நூலில் சிக்கி, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதி காயம் அடைந்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்



  • Dec 09, 2024 17:23 IST

    ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

    மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது



  • Dec 09, 2024 17:06 IST

    ஆம் ஆத்மி இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்

    டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான, இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் துணை முதல்வர்  சிசோடியா, ஜங்புரா தொகுதியில் போட்டியிட உள்ளார்.



  • Dec 09, 2024 16:45 IST

    5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

    டிசம்பர் 11-ஆம் தேதி தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



  • Dec 09, 2024 16:17 IST

    மகா தீபம் ஏற்ற அனுமதி

    கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைக்கோயிலில் மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 14-ஆம் தேதி வரை நந்த பூஜை, கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Dec 09, 2024 15:50 IST

    இ.பி.எஸ் மீது ஸ்டாலின் கடும் தாக்கு

    அ.தி.மு.க.வின் துரோக வரலாறுக்கு அடையாளமாக இ.பி.எஸ் இருக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, சுரங்கம் மற்றும் கனிம திருத்த சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்து விட்டு, இப்போது தமிழக நலனுக்காக பேசுவது போல் நடிக்கிறார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Dec 09, 2024 15:23 IST

    இயல்பை விட கூடுதல் மழை - வானிலை ஆய்வு மையம்

    சென்னையில் இயல்பை விட 17 சதவீதம் கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 09, 2024 15:15 IST

    ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் ஏன்?-  திருமாவளவன் விளக்கம் 

    “ஊறுவிளைவிக்கும் கருத்துகளால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாததாக அமைந்துவிட்டது” என்று  ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் குறித்து திருமாவளவன் கூறியுள்ளார். 



  • Dec 09, 2024 14:58 IST

    ஸ்டாலினுடன் சந்திப்பு - திருமாவளவன் விளக்கம் 

    புயல் நிவாரண நிதியாக முதலமைச்சரிடம் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வி.சி.க எம்.எல்.ஏ.க்கள் 4பேர், எம்.பி.க்கள் 2 பேர் நிவாரண நிதி வழங்கி உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். 

    இது தொடர்பாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரூ.2475 கோடி புயல் நிவாரணம் வழங்க ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. வழக்கம்போல் ஒன்றிய அரசு ரூ.944 கோடி மட்டும் கொடுத்து வஞ்சித்துவிட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை மீறி தொடர்ச்சியாக ஆதவ் அர்ஜுனா எதிர்மறையாக செயல்பட்டு வருகிறார். விசிக தலைமை நிர்வாகக் குழுவில் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டுவந்தது" என்று அவர் கூறினார். 



  • Dec 09, 2024 14:46 IST

    5 மாவட்டங்களில் கனமழை

    தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவ.11-ல் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

     



  • Dec 09, 2024 14:30 IST

    பட்டப்பகலில் மனைவியின் கையை வெட்டிய கணவன்

    திருப்பூரில் பட்டப்பகலில் நடுரோட்டில் மனைவியின் கையை கணவன் வெட்டிய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்து கணவன் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த சரண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரண்யாவின் கணவர் ரமேஷ் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். எதற்காக வெட்டினார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

     



  • Dec 09, 2024 13:44 IST

    சுரங்கம் -கனிம திருத்த மசோதா: 2023-ல் அ.தி.மு.க ஆதரவு  

    மத்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில், தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டை பதிவு செய்த நிலையில், மாநிலங்களவையில் அ.தி.மு.க அம்மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது

    2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை, இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அவையில் பேசியுள்ளார்



  • Dec 09, 2024 13:23 IST

    அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது - ஸ்டாலின் உறுதி

    "சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதினோம். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்துள்ளோம். நாடாளுமன்றம் கூடும் நேரத்தில் எல்லாம் தி.மு.க எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தி.மு.க அரசு எந்த காலத்திலும் அலட்சியமாக இருந்ததில்லை. ஏலம் விட்டாலும் சரி, ஒருபோதும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்காது" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 



  • Dec 09, 2024 13:20 IST

    ‘ஆ ஊ-ன்னா என்ன?; மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கூட கொடுப்போம்':  இ.பி.எஸ் ஆவேசம்  

    "அரசின் அலட்சியத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தில் துரைமுருகன் ஆ... ஊ... என்று பேசலாமா?. பேசுவதற்கு சரக்கு இல்லையென்றால் இப்படி தான் பேச முடியும். 

    நான் முதலமைச்சராக இருக்கும் வரை, டங்ஸ்டன் சுரங்கத்தை அமைய விட மாட்டோம். நான் கேட்டது முதலமைச்சர் எழுதிய கடிதமல்ல, நீர்வளத்துறை மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தையும், அதற்கான பதில் கடிதத்தையும் தான் கேட்டேன்" என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 



  • Dec 09, 2024 13:13 IST

    அரிட்டாப்பட்டி  தனித்தீர்மானம் நிறைவேற்றம் - அ.தி.மு.க ஆதரவு 

    அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்கு எதிரான தனித்தீர்மானம் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது



  • Dec 09, 2024 13:11 IST

    'நான் முதல்வராக இருக்கும் வரை, டங்க்ஸ்டன் சுரங்கம் அமையாது' -  ஸ்டாலின் பேச்சு 

    "நான் முதலமைச்சராக இருக்கும் வரை, டங்க்ஸ்டன் சுரங்கம் அமையாது. அப்படி அமைந்தால் நான் பொறுப்பில் இருக்க மாட்டேன்" என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். 



  • Dec 09, 2024 13:02 IST

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தி.மு.க எம்.பிக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? இ.பி.எஸ்

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினாலும், இதுவரை தமிழக அரசு கண்டிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

    திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் திமுக எம்பிக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? நாடாளுமன்றத்தை ஏன் முடக்கவில்லை?

    டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நேரத்தில் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை. சுரங்கம் அமைந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்தியபின் தான்  முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

    பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகு வேறு வழியின்றி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஒப்பந்தப்புள்ளி கோரிய போதே தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் திட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம் என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 



  • Dec 09, 2024 12:50 IST

    திருமா தலைமைச் செயலகம் வருகை

    விசிக தலைவர் திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க தலைமைச் செயலகம் வந்தார். 

    ஃபீஞ்சல் நிவாரணமாக விசிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் வழங்கிய நிதியை முதலமைச்சரிடம் வழங்குகிறார்

    ஆதவ் அர்ஜூனாவை 6 மாதம் சஸ்பெண்ட் செய்த பிறகு, முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்திக்கிறார். 



  • Dec 09, 2024 12:25 IST

    ஸ்டாலினை சந்திக்கும் திருமா

    தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார். விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா சஸ்பெண்ட செய்யப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்னும் சற்று நேரத்தில் சந்தித்து பேச உள்ளார். 



  • Dec 09, 2024 11:59 IST

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம் 

    மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக சட்டப் பேரவையில் தனித்தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. 

    தமிழக அரசு எதிர்த்த போதும் சுரங்க ஏல நடவடிக்கையை மத்திய அரசு
    மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் துரைமுருகன் பேசினார். 



  • Dec 09, 2024 11:57 IST

    ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து இடைநீக்கம்

    விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

    கட்சியின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை என  திருமாவளவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 



  • Dec 09, 2024 11:46 IST

    27ம் தேதி முதல் சென்னையில் புத்தகக் கண்காட்சி

    சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் வரும் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைக்கின்றனர்

    துவக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை முதலமைச்சர் வழங்க உள்ளார்

    புத்தகக் காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும் 

    மொத்தம் 17 நாட்கள் நடக்கும் புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. எல்லா புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 



  • Dec 09, 2024 11:42 IST

    செந்தில் பாலாஜி பதில்

    சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன. இவற்றை புதைவிட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், அம்பத்தூர் தொகுதியும் உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும் என அம்பத்தூர் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார். 



  • Dec 09, 2024 11:12 IST

    அரசு விரைவு பேருந்து ஊழியர்கள் திடீர் போராட்டம்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் வரும் வழியை, பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனம் மூடியதாக புகார் கூறினர். 

    வழியை மூடியதால் அரசு பேருந்துகளுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததாக குற்றச்சாட்டு, வழியை மூடி வைத்ததால் பயணிகள் ஆம்னி பேருந்துகளுக்கு சென்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • Dec 09, 2024 10:56 IST

    ட்ங்க்ஸ்டன் சுரங்கம் - பரிசீலிப்பதாக மத்திய அரசு உறுதி

    மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.



  • Dec 09, 2024 10:47 IST

    சட்டப்பேரவையில் அமைச்சர் பெரிய கருப்பன் பதில்

    தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 544 புதிய நியாய விலைக் கடைகளும், 1126 புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மொத்தமாக 1,670 புதிய நியாய விலைக் கடைகள் துவக்கப்பட்டுள்ளன - சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார்.



  • Dec 09, 2024 10:44 IST

    சிரியா தனது நிறுவனங்கள், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சீனா அழைப்பு

    சிரியாவின் நிலைமையை பெய்ஜிங் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திடமிருந்து கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நாட்டில் விரைவில் ஸ்திரத்தன்மை திரும்பும் என்று நம்புவதாகவும் சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



  • Dec 09, 2024 10:27 IST

    புதிய சிறை கேட்ட உறுப்பினர் ஊத்தங்கரை தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் ரகுபதி பதில்

    "ஊத்தங்கரையில் கிளைச் சிறை ஏற்கனவே இயங்கி வருகிறது, பராமரிப்பு பணிக்காக தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, விரைவில் பராமரிப்புப் பணி முடிந்து கிளைச்சிறை மீண்டும் திறக்கப்படும். எனவே புதிய சிறை அமைக்க வேண்டிய தேவை கிடையாது" என  உறுப்பினர் ஊத்தங்கரை தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார்.



  • Dec 09, 2024 10:25 IST

    மதுரையில் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து உறுப்பினர் பூமிநாதன் கேள்வி: அமைச்சர் நேரு பதில்

     “மதுரை புறநகர் பகுதியில் ரூ. 2,000 கோடியிலும், மதுரை மாநகர் பகுதியில் ரூ.1,500 கோடியிலும் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மழைநீர் வடிகால்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்”  என அமைச்சர் நேரு கூறினார்.



  • Dec 09, 2024 10:12 IST

    தடுப்பணைகள், தூர்வாரும் பணி உள்ளிட்ட உறுப்பினர்கள் கேள்விக்கு துரைமுருகன் பதில்

    "இந்த காலத்துல பெய்யுற மழையெல்லாம் அணையில் இல்லை அணையே நிற்க மாட்டேங்குது.." என சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். மேலும் நிதியை பொறுத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்ப்டும் எனவும் கூறினார்.



  • Dec 09, 2024 09:53 IST

    உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது - துரைமுருகன்

    "சோமரசம்பேட்டை அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது, வேண்டுமென்றால் அந்த பகுதியில் உய்யகொண்டான் கால்வாய் சீரமைத்து தரப்படும். வேளாண் பாசனத்திற்கான உய்யகொண்டான் கால்வாய் 69 கி. மீ தூரம் சொல்கிறது. இதன் மூலம் தஞ்சை திருச்சியில் 40,000 ஏக்கர் நிலங்கள் 11 மாதங்கள் பாசன வசதி பெறுகிறது" என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பதில் கூறினார். 



  • Dec 09, 2024 09:49 IST

    சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்

    தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில் சி.பி.எம். முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, ரத்தன் டாடா, எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோரின் மறைவுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.



  • Dec 09, 2024 09:20 IST

    புள்ளி பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி சரிவு

    அடிலெய்ட் தோல்வியை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு  இந்திய கிரிக்கெட் அணி சென்றது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளன.



  • Dec 09, 2024 08:55 IST

    டெல்லி: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

     டெல்லியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.



  • Dec 09, 2024 08:53 IST

    தொழில்நுட்பக் கோளாறு - விமானம் தரையிறக்கம்

    சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டு சென்ற ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம், நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால்  தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 



  • Dec 09, 2024 08:47 IST

    முதலமைச்சரை சந்திக்கிறார் திருமாவளவன்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று டிசம்பர் 9 ஆம் தேதி பகல் 1 மணிக்கு அவரது இல்லத்தில்  விசிக தலைவர் திருமாவளவன் சந்திக்கவுள்ளார். வெள்ள நிவாரண நிதியை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Dec 09, 2024 08:36 IST

    சாலை விபத்து - 10க்கும் மேற்பட்டோர் காயம்

    சென்னையில் இருந்து கோவைக்கு 37 பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து, அவிநாசி யை அடுத்து வேலாயுதம்பாளையம் பைபாஸ் அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Dec 09, 2024 08:34 IST

    நீங்கள் பேசிய கொள்கை என்ன? - பொன்முடி கேள்வி

    தான் நடித்த படங்களிலும் தனது கொள்கையை வெளிப்படுத்தியவர் உதயநிதி என கூறிய அமைச்சர் பொன்முடி உங்கள் படத்தில் நீங்கள் பேசிய கொள்கை என்ன என விஜய்க்கு கேள்வி எழுப்பி உள்ளார்.



  • Dec 09, 2024 08:28 IST

    ஒ மை காட் - நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்

    கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். 



  • Dec 09, 2024 07:31 IST

    கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அறிவிப்பு

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



Tamil News Update news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment