விஷச் சாராயம் குடித்ததாக 10 நாட்களுக்கு பிறகு ஒருவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், அருகேயுள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த வாரம் கள்ளச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டிலும் விஷச் சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கியது. மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கியது.
இந்நிலையில் செங்கபட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சித்தாமூரில் விஷச் சாராயம் குடித்ததாக , அரசு மருத்துவமனைக்கு ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். விஷச் சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்து, 10 நாட்கள் கழித்து இவர் சிகிச்சைக்கு வந்துள்ளார்.
விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்குவதாக, கூறப்பட்டதால், இந்த பணத்தை வாங்குவதற்காக அவர் இப்படி சொல்கிறாரா என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“