/tamil-ie/media/media_files/uploads/2018/07/s695.jpg)
Tamil nadu news today updates : டெல்லி சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, 81.67 கோடி மதிப்புள்ள 139 தேர்தல் நிதிப் பத்திரங்கள் எஸ்பிஐயின் பல்வேறு கிளைகளால் விற்கப்பட்டுள்ளது. லோகேஷ் பாத்ரா (ஓய்வு) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை பெற்றுள்ளார்.
இத்திட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 6,210 கோடி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மை கேள்வியாக்கப் படுகிறது என்று எதிர்க் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கூறிவருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் இந்த திட்டத்திற்கு தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தது.
தேர்தல் நித பத்திரத்தை தடை செய்ய வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமனறத்தில் விசராணையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பகத்சிங் மற்றும் பிற புரட்சியாளர்களை மீட்பதற்கு மகாத்மா காந்தி போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார். இந்த மாற்று வரலாற்றை மறைப்பதற்கு புரட்சியாளர்களின் வராலாற்றுக் கதைகள் வேண்டுமென்றே குறைக்கபப்டுவதாகவும்” தெரிவித்துள்ளார்.
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தலைமையில், நடைபெற்ற அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு கூட்டத்தில், சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். குடியுரிமை சட்ட விவகாரத்தில் அரசியல் செய்யும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை சென்னையில் போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்த தடை விதித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசு செய்வதைத்தான் சொல்லும், சொல்வதைத்தான் செய்யும் என்று கூறிய நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில், ஆங்கில செய்தித்தாளில் வெளியான செய்தியை பதிவிட்டு, “கடந்த 3 ஆண்டுகளில் 2000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளன. படிப்படியாக மதுவிலக்கு என்ற வாக்குறுதி என்ன ஆனது? சொல்வது ஒன்று செய்வது வேறு என அதிமுகவின் இரட்டை வேடம் இது” கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 3ஆண்டில் 2000-க்கும் மேலான #TASMAC புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்!
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது?சட்டப்பேரவையிலும்,மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது! pic.twitter.com/UcRF06eJaK
— M.K.Stalin (@mkstalin) February 13, 2020
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 16-க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க திமுக மனு அளித்துள்ளது. இது குறித்து திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்ஹ்டு சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
"சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாமல் மேயர் பதவியை பிடிக்க தான் ஆர்வம் காட்டுகின்றனர்"
அரசியல் கட்சிகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
20 ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாமல் தூங்கிக் கொண்டிருப்பதா?- நீதிபதிகள் கண்டனம்
பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு. மாநில தகவல் ஆணையத்தில் கல்வித்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜர். 2000 முதல் 2019 வரை 164 சம்பவங்கள் நடந்துள்ளதாக காவல்துறை சார்பில் ஆவணங்கள் சமர்பிப்பு
தொழிலதிபர்களின் வாராக்கடன்கள் குறித்து தொலைக்காட்சி, நாளேடுகளில் வெளியிட கோரியும், மாணவர்களின் கல்வி கடன் ரூ.55 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யக்கோரியும் வழக்கு
* வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாமை துவக்கி வைக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த பழங்குடியின சிறுவனை தனது செருப்பை கழட்டி விடுமாறு அழைத்தார். இந்த விவகாரம் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. பின்னர் அந்த சிறுவனின் பேச்சுவார்த்தை நடத்திய சீனிவாசன் தனது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கள் என்ன? என்று டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் பதிலளிக்க பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடுகள்-முதல்வரின் சொந்த மாவட்டத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டதாக முதல்வரிடமே தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர். அணிவகுக்கும் பல்வேறு புகார்களை சிபிஐ விசாரிக்க தாமதமின்றி உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் குற்றப்பின்னணி குறித்து அரசியல் கட்சிகள் 72 மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட காலதாமதம் ஆவதால் நகராட்சி தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாகிறது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் அறிவிப்பை உடனடியாக வெளியிட உத்தரவிட கோரிய வழக்கில் இந்த பதிலை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் கொண்டுவருவதற்கான நடவடிக்கையாக, ஏன் குற்றவியில் வழக்கு பதிவி செய்யப்பட்டவர்களுக்கு ஏன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்பளிக்கப் பட்டது என்ற காரணத்தை அரசியல் கட்சிகள் தங்கள் வலைப்பக்கங்களில் வெளியிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் அனைத்து விவரங்களும், உள்ளூர் செய்தித்தாள், ஒரு தேசிய செய்தித்தாள், பேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையில், 1.5 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர் ”என்று டைம்ஸ் நவ் உச்சி மாநாட்டில் மோடி தெரிவித்தார். ஆனால் கடந்த ஆண்டில் மட்டும் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். நாட்டில் 2,200 பேர் மட்டுமே தங்கள் வருமான வரி கணக்கில் ஆண்டுக்கு ரூ. ஒரு கோடி வருவாய் அறிவித்திருப்பது நம்பமுடியாதது என்று கூறிய மோடி, வரி செலுத்துவது சுமையில்லை என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் 'டைமண்ட் பிரின்சஸ் 'என்ற பயணிகள் கப்பல் கடந்த 9 நாட்களாக கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3,500க்கும் அதிகமான மக்கள் துறைமுகத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இந்த கப்பலில் 6 தமிழர்கள் உட்பட 100 இந்தியர்கள் உள்ளனர். தமிழர்கள் உள்ளிட்ட இந்திய பணியாளர்களை பாதுகாப்பாக அழைத்துவர வெளியுறவுத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக கழகத்தின் பெயரில் போலி இணையதளம் நடத்துதல், அதிமுக உறுப்பினர் என்று கூறி பலரையும் ஏமாற்றல் போன்ற குற்றங்களுக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிசாமி ஜனவரி 24ம் தேதி கைது செய்யப்பட்டார். கோவை சிறையில் அடைக்க்கபப்ட்ட கே.சி பழனிசாமி இன்று ஜாம்னில் வெளிவருகிறார்
குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பெயர்களை நீக்கி புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. குரூப் 4 தேர்வில் புதிய தரவரிசைப் பட்டியல்படி, பிப்ரவரி 19ஆம் தேதி முதல் கலந்தாய்வு அறிவித்துள்ளது. மேலும், கலந்தாய்விற்கு வர தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நமது மக்களுக்கும் நமது பொருளாதாரத்திற்கும் மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தலை அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தான் உணர்வதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights