News 18 Fake Email Case: நியூஸ் 18.காம் நிறுவனத்தின் அசோசியேட் எக்ஸிகியூட் எடிட்டர் வினய் சரவாகி அனுப்பியது போன்று போலி மின்னஞ்சலை உருவாக்கி பரப்பியதற்காக பெயரிடப்படாத நபர்களுக்கு எதிராக மோசடி, நற்பெயருக்கு சேதம் மற்றும் ஐ.டி சட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளில் சென்னை சைபர் கிரைம் கிளை வழக்கு பதிவு செய்துள்ளது.
நியூஸ் 18 அமைப்பு அதன் ஊழியர்கள் மீது தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாகக் யூடியூபர் மாரிதாஸ் ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்திருந்தார். பின்னர் வினய் சரவாகி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனது பெயரில் தயாரிக்கப்பட்ட போலி மின்னஞ்சல் தனது நற்பெயருக்கும் சேனலுக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதாக வினய் கூறியிருந்தார்.
தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா – 2 லட்சத்தை நெருங்குகிறது பாதிப்பு
சைபர் கிரைம் கிளை பிரிவு 465 (மோசடிக்கான தண்டனை), பிரிவு 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்) மற்றும் பிரிவு 471 (போலி (ஆவணம் அல்லது மின்னணு பதிவைப் பயன்படுத்துதல்) பிரிவு 66 பி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் பிரிவு 43 கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளது.
போலி மெயில் ஐடியை உருவாக்கி அஞ்சலை அனுப்பியது யார் என்பது பற்றிய முதன்மை விசாரணை என்பதால், மரிதாஸ் அல்லது மின்னஞ்சலை பகிர்ந்த வேறு எவரது பெயரையும் குற்றப்பிரிவு தரப்பில் குறிப்பிடவில்லை.
வினய் சரவாகி தனது புகாரில், 'மாரிதாஸ் ஒரு வீடியோவை வெளியிட்டு, நியூஸ் 18 சேனலை திமுக மற்றும் திராவிடர் கழகம் ஆதரவாளர்கள் இயக்கி வருவதாகவும், சேனல் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்து எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் அலுவலகத்திற்கு இந்த புகாரை மின்னஞ்சலாக அனுப்ப வேண்டும் என்றும் மாரிதாஸ் கூறினார். இதனால், சேனல் பற்றிய தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சுமார் 2500 பேர் நிறுவனத்தின் சென்னை கிளைக்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil