New Update
/indian-express-tamil/media/media_files/YfoIjC4UUDBOM5y4KNPg.jpg)
வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களில் வெப்பம் இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மழைக்காலம் முடிந்து குளிர்காலம் நிலவி வருகிறது. அதே நேரத்தில், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களில் வெப்பம் இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
17-02-2025 மற்றும் 18-02-25: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
19-02-2025 மற்றும் 21-02-25 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
18.02.2025: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.