அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வழக்கத்தைவிட 3 டிகிரி அதிகமான வெப்பநிலை பதிவாகி உள்ளது. 104 டிகிரி வரை வெயில் சென்றது. இந்நிலையில் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை மதியத்திற்கு மேல் மழை பெய்யலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று மட்டும் 25 மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், காரைக்கால் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“