என்.எல்.சி விபத்தில் 7 பேர் பலி; அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

நெய்வேலி என்.எல்.சி. 2வது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இன்று 7 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

By: Updated: July 1, 2020, 06:23:31 PM

நெய்வேலி என்.எல்.சி. 2வது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இன்று 7 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2வது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் என்.எல்.சி தொழிலாளர்கள் 7 பேர் பலியானார்கள். 17 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியும் அளிப்பதாக அறிவித்தார். மேலும், விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் குறைவாக காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதோடு, காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த செய்தி அறித்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பேசியதாகவும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஏற்கெனவே சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாக உள்துறை அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


நெய்வேலி என்.எல்.சி. விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  தனது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். அதில், “நெய்வேலி 2-ஆம் அனல் மின்நிலையத்தில் எதிர்பாராத விதமாக கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. இக்கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, காயமடைந்தோர் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


அதே போல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் 7 தொழிலாளர்கள் மரணமடைந்து பலரும் காயமடைந்திருக்கிறார்கள். மறைந்தவர்களுக்கு அஞ்சலி. காயமடைந்தவர்களுக்கு என் ஆறுதல்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “என்.எல்.சி நிறுவனம், இழப்பீட்டை உறுதி செய்வதுடன், இனி ஒரு தொழிலாளியும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதை உறுதி செய்திட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Neyveli nlc power plant boiler blast 7 dead amit shah edappadi k palaniswami mk stalin condolence

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X