/indian-express-tamil/media/media_files/2025/09/29/law-college-2025-09-29-10-12-17.jpg)
தனியார் சட்டக் கல்லூரி ஆய்வில் முறைகேடு:மறு ஆய்வு செய்ய தொண்டு நிறுவனம் வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்க தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களை மேற்கோள் காட்டி, “2024 -2025 மற்றும் 2025 - 2026-ஆம் ஆண்டுகளுக்கான ஆய்வுக் குழு மூன்று நாட்களில் மாநிலம் முழுவதும் 1,200 கி.மீ தூரம் பயணம் செய்து ஆய்வு செய்துள்ளது. இதில், முறைகேடு நடந்திருக்கலாம் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில், தனியார் சட்டக் கல்லூரிகளில் மறு செய்ய வேண்டும் என்றும் அதனை வீடியோ பதிவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது. அதாவது, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தால் தனியார் கல்லூரிகளில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்று எங்களுக்கு புகார்கள் வந்தன.
இந்தக் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஆய்வு தேதிகள், ஆய்வுக் குழு உறுப்பினர்கள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை பல்கலைக்கழகம் அளிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை தாக்கல் செய்தோம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பதிலின்படி, ஜனவரி 30, 2024 முதல் பிப்ரவரி 1, 2024 வரை மூன்று நாட்களில் 10 தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்க பல்கலைக்கழகம் ஆய்வுகளை நடத்தியது. ஒவ்வொரு கல்லூரியும் முழு நாள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
அதே சமயம் பயண நேரத்தைக் கழித்தால் இந்த குழுவிற்கு குறைந்த நேரம் மட்டுமே இந்திருக்கும். உதாரணமாக, திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி சட்டக்கல்லூரி, நாகப்பட்டினத்தில் உள்ள சர் ஐசக் நியூட்டன் சட்டக் கல்லூர், புதுக்கோட்டையில் உள்ள அன்னை தெரசா சட்டக் கல்லூரி ஆகியவற்றில் ஜனவரி 30-ஆம் தேதி ஆய்வு நடத்தப்பட்டது என்றும் அந்த குழு 420 கி.மீ பயணம் செய்தது என்றும் பல்கலைக்கழகம் கூறியது.
பேராசிரியர்கள் தகுதிகள், சம்பளம், வகுப்பறைகள், உள்கட்டமைப்பு, கட்டிடங்கள், நூலகம் ஆகியவற்றை குழுக்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு கல்லூரியை முழுமையாக ஆய்வு செய்ய ஒரு நாள் ஆகும். இதனால் முறைகேடுகள் நடந்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று .ராதாகிருஷ்ணன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.