scorecardresearch

என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை:  5 பேர் கைது

பாப்புளர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 5 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை
என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை

பாப்புளர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 5 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். சென்னை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட நகரங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் கூர்மையான ஆயுதங்கள், டிஜிட்டல் கருவிகள், கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  சென்னையைச் சேர்ந்த அப்துல் ரவ்வீக் ( வயது 47 ) , மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மொகமத் யூசிப் ( வயது 35) மற்றும் மொகமத் அபாஸ் (வயது 45) , திண்டுக்கலை சேர்ந்த கயிசர், தேனியைச் சேர்ந்த  ஷாதிக் அலி ( வயது 39) என்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம், பாப்புளர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விரோத செயலில் ஈடுபட்டதாக பி.எப்.ஐ அமைப்பின் மீது என்.ஐ.ஏ அதிகாரிகளால், கடந்த ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.  மேலும் 10 பேர் மீது , இந்த வருடம் மார்ச் 17ம் தேதி  குற்றப்பத்திரிக்கை தாக்கல்  செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Nia arrests five suspects on searchers in tamilnadu yesterday

Best of Express