தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடத்தி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் முத்துப்பேட்டை பகுதியிலும், அதேபோல் திருச்சி சர்வதேச விமான நிலையம் அடுத்துள்ள காமராஜர் நகர் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் முன்னாள் மண்டல தலைவர் அமீர் பாஷா வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான் கோட்டை ராஜாஜி தெருவில் வசித்து வரும் முகமது சித்திக் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். அப்பகுதியில் விமான நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/TSEpp8xfl0oA9GgQoyCY.jpeg)
/indian-express-tamil/media/media_files/Wo4d8ebJALfmOa3PWCIC.jpeg)
இவர் எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகியாக இருந்தவர்.
இதேபோல், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சில இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரழுந்தூர், வடகரை, திருவாரூரில் முத்துப்பேட்டை மற்றும் கம்பூர் ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“