scorecardresearch

10 கிலோ கஞ்சா, 1000 சிங்கப்பூர் டாலர், ரூ16 லட்சம் தங்கம்… சென்னையில் என்.ஐ.ஏ சோதனையில் அதிரடி பறிமுதல்

. இதில் ரூ.82 லட்சம் பணம், ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம், 1000 சிங்கப்பூர் டாலர் மற்றும் 10 கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டது. 6 என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

nia chennai raid
NIA

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 82 லட்சம் ரூபாய் பரிமுதல் செய்யப்படுள்ளது.

கடந்த வியாக்கிழமை கொச்சியில் இருந்து தமிழகம் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் 8 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.82 லட்சம் பணம், ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம்,  1000 சிங்கப்பூர் டாலர் மற்றும் 10 கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டது. 6 என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை பர்மா பசாரில் கடை வைத்துள்ள மொஹமத்  இலியாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இவரை கொச்சிக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய உள்ளனர். சென்னை காவல்துறையின் ஆயுதப் படையில் உள்ள 50 காவலர்கள் இந்த சோதனையில் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இருந்தனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீண்டது.

டிசம்பர் 2022ம் ஆண்டு, திருச்சியில் உள்ள இலங்கை நிவாரண முகாமை சேர்ந்த 9 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஹஜ் சலீம் என்ற போதை பொருள் விற்பனை செய்பவருக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டவரக்ள் என்று கூறப்படுகிறது.   

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Nia officers got 16 lakhs gold kanja and money in chennai