Advertisment

போலி பாஸ்போர்ட், வெடிகுண்டு வழக்கு: மதுரையில் காஜிமார் தெருவில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

மதுரையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் மதுரையில் காஜிமார் தெருவில் உள்ள இளைஞரின் வீட்டில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
Oct 11, 2023 16:06 IST
New Update
Coimbatore NIA Raid

போலி பாஸ்போர்ட், வெடிகுண்டு வழக்கு: மதுரையில் காஜிமார் தெருவில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை

போலி பாஸ்போர்ட், ஐதராபாத் மற்றும் லக்னோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போன்ற வழக்குகள் தொடர்பாக மதுரையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் மதுரையில் காஜிமார் தெருவில் உள்ள இளைஞரின் வீட்டில் புதன்கிழமை (அக்டோபர் 11) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் என்பவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

முகமது தாஜுதீன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் தாஜுதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. போலி ஆவணங்கள் அளித்து பாஸ்போர்ட் வாங்கிய வழக்கு, ஐதராபாத் மற்றும் லக்னோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கு தொடர்பாகவும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Nia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment