கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை

முகமது யாசீர் , சதாம் ஹுசைன் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

NIA raids 5 locations at Coimbatore in Islamic State terror funding probe - கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை
NIA raids 5 locations at Coimbatore in Islamic State terror funding probe – கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை

கோவையில் ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று(ஆக.29) வியாழக்கிழமை காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க – தமிழகம் தொடர்பான செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்டுகளை இங்கே க்ளிக் செய்யவும்

கோவை உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் உமர் பாரூக், சனாபர் அலி, சமீனா முபின், முகமது யாசீர் , சதாம் ஹுசைன் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்ததால் ஹய் அலாட் கொடுக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கும் தமிழகத்தில் புகுந்த தீவிரவாதிகளுடன் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இவர்கள் அனைவரும், இதற்கு முன்னும் மத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் சிக்கி விசாரணைக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, லக்சர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களே தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்து இருந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், இலங்கையை சேர்ந்த 5 பேர் அடங்கலாக 6 பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகக் கூறப்பட்டது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nia raids 5 locations at coimbatore in islamic state terror funding probe

Next Story
மெட்ரோ ரயில் ஸ்டேசன்களுக்கு அருகிலேயே ஷாப்பிங் மால்கள் : சென்னை மெட்ரோ “பலே” திட்டம்..chennai metro 50 percent Subsidy onsunday and public holidays to boost ridership
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X