தமிழ்நாட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் 21 இடங்களில் சனிக்கிழமை சோதனை நடத்தியதில் 4 பேரை கைது செய்தனர். அரேபிய வகுப்புகள் என்ற பெயரில் இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தில் இளைஞர்களை தீவிரவாதிகளாக ஆக்கி, பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டப்பட்டதாகக் கூறப்படும் 11 கல்லூரிகள் உள்பட 21 இடங்களில் சோதனை நடைபெற்றது.
கடந்தாண்டு நடைபெற்ற கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் 4 பேரை கைது செய்தனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022 அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஐமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ், இஸ்மாயில், அப்சல் கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த கோவை, நீலகிரி மாவட்டத்தைச் மேலும் 7 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் 13 பேர் மீதும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் அவ்வபோது சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இவ்வழக்கு தொடர்பாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் 27 இடங்களில் நேற்று முன்தினம் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் அடிப்படையில் கார் வெடிப்பு வழக்கில் பொள்ளாச்சி சையத் அப்துல் ரஹ்மான் உமரி (52), கோவை குனியமுத்தூரை சேர்ந்த இர்ஷாத் ஜமீல் (22), பொன்விழா நகரை சேர்ந்த மொஹமத் ஹூசைன் (38) மற்றும் ஜமின் பாஷா உமர் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 6 லேப்டாப்கள், 25 செல்போனகள், 34 சிம்கார்டுகள், 3 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் என்.ஐ. ஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“