கடந்த 2019 ஆம் ஆண்டு கும்பகோணத்தை சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கு சம்பந்தமாக NIA அதிகாரிகள் இன்று தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளின் இல்லங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில், அவரது இல்லத்தில் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர் என கூறப்படுகின்றது.
அப்பாஸ் தான் வாடகைக்கு இருக்கும் வீட்டிற்கு 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை காலி செய்வதாக கூறிய நிலையில், வீட்டின் உரிமையாளர் (1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்) பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். அந்த பணத்தில் செலவு செய்தது போக 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பாக்கி வைத்திருந்ததாகவும் அதனை என்.ஐ.ஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil