/indian-express-tamil/media/media_files/zw6JAucRNvv80k9gBYEA.png)
ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; கருக்கா வினோத்தை காவலில் எடுக்க கோரும் என்.ஐ.ஏ மனு தள்ளுபடி
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிய சம்பவத்தில் பிரபல ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுக்க கோரும் என்.ஐ.ஏ மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசினர். அப்போது அங்கிருந்த காவல்துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டு கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் கருக்கா வினோத்திற்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என கருதி இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், கருக்கா வினோத்தை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு அளித்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் கருக்கா வினோத்தை போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து என்.ஐ.ஏ. பொங்கல் விடுமுறை தினங்கள் முடிந்த பிறகு கருக்கா வினோத்தை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்த அதிகாரிகள் விசாரிப்பதற்கான மனுவை அளிக்க உள்ளதாகவும், என்ன காரணங்களுக்காக போலீஸ் காவலில் விசாரிக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப மீண்டும் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us