நீலகிரி வனக் கோட்டம், எமரால்டு ஊருக்கு அருகில் அவிலாஞ்சி அணை உபரி நீர் வெளியேறும் கால்வாய் மற்றும் அதன் கரையில் இறந்து கிடந்த இரண்டு புலிகள் மற்றும் அதன் அருகில் இறந்த மாட்டின் உடல் ஆகியவற்றை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அதிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மாதிரிகளை முறையாக ("SACON") ஆனைகட்டி மற்றும் ("Forensic Lab") கோயம்புத்தூருக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/JXo8EFzoSAu7X707yvwE.jpeg)
இறந்த புலிகள் தொடர்பாக குழு அமைத்து அருகில் உள்ள கிராமங்களில் மாடு ஏதாவது காணாமல் போயிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரனை செய்யப்பட்டது. விசாரனையின் போது எமரால்டு பகுதியை சேர்ந்த சேகர் என்பவருடைய மாடு கடந்த 10 தினங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக சிலர் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் சேகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் அவருடைய மாடு 10 தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக தெரிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/3hi3e7czizlr9HjQSdut.jpeg)
தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ய போது, நான் மாடு காணவில்லை என்று தேடி சென்றேன். அப்போது என் மாட்டை ஏதோ ஒன்று அடித்து கொன்று இருப்பதை அறிந்தேன். அவிலாஞ்சி அணை உபரி நீர் வெளியேறும் கால்வாய் அருகே மாட்டை பார்த்தேன். இதையடுத்து அந்த இடத்தில் கோபத்தில் பூச்சிக்காக பயன்படுத்தப்படும் மருந்தினை வைத்து விட்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/3yMaKX0SEjlSKf1tD2V7.jpeg)
அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
/indian-express-tamil/media/media_files/Ru45oSbapYs4x5ItRJYY.jpeg)
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“