Nilgiris Coimbatore Flood : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமர்ந்திருக்கும் மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி. நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை இன்றும் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு இன்றும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை :
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும்.
அதிக அளவு மழையைப் பெற்ற இடங்கள்
நீலகிரியின் தேவலா 13 செ.மீ
கோவையின் சின்னக்கல்லாறு - 10 செ.மீ
அவலாஞ்சி (நீலகிரி), சோலையாறு (கோவை) - 8 செ.மீ.
தேனியின் பெரியாறு - 5 செ.மீ
தேக்கடி (தேனி) பொன்னேரி (திருவள்ளூர்) - 4 செ.மீ
பெருஞ்சானி, புத்தன் அணை, செங்கோட்டை, நடுவட்டம், மற்றும் நீலகிரியின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது.
மேலும் படிக்க : மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது கேரளம்… மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!