scorecardresearch

அரசு பஸ் மீது பாறாங்கல்லை தூக்கிப் போட்டு உடைத்த ஆசாமி: வீடியோ

பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தில் நீண்ட நேரமாக இல்லாததால் ஆத்திரத்தில் சாலையில் இருந்த கல்லை எடுத்து அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார்.

அரசு பஸ் மீது பாறாங்கல்லை தூக்கிப் போட்டு உடைத்த ஆசாமி: வீடியோ

ரகுமான், கோவை

நீலகிரியில் மதுபோதையில் அரசு பேருந்தின் முகப்பு கண்ணாடியை உடைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இருந்து குன்னூர் செல்லக்கூடிய பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்றுகொண்டிருக்கும் பேருந்தின் முகப்பு கண்ணாடியை ஒருவர் பெரிய கல்லை தூக்கிபோட்டு உடைத்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக கோத்தகிரி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.  மேலும் நபரின் பெயர் வின்செண்ட் எனவும் இவர் கோத்தகிரி குப்பட்டிக்கம்பை பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளாது

முழு மதுபோதையில் இருந்த அவர், தன் மனைவி குழந்தையுடன் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதிக்கு செல்ல நீண்ட நேரம் பேருந்தில் காத்து இருந்ததாகவும் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தில் நீண்ட நேரமாக இல்லாததால் ஆத்திரத்தில் சாலையில் இருந்த கல்லை எடுத்து அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். .

இதனையடுத்து பொது சொத்தை சேதப்படுத்தியது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Nilgiris drunk person throw big stone to government bus damage