நீலகிரி மாவட்டம், சிங்காரா வனப்பகுதியில், யானைகள் அதிகமாக வசித்து வருகின்றன. இங்கு அடிக்கடி யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக மக்கள் புகார் தெரிவிப்பது வழக்கம். மேலும் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதும், அங்கிருந்து உணவு தேடி காடுகளில் அலைவதும், காடுளுக்கு வரும் மக்களை அச்சுறுத்துவதும் தொடர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் யானைகளை விரட்டுவதற்காக மட்டுமே முயன்று வருகின்றனர்.
ஆனால் சில சமூக விரோதிகள் யானைகளை கொலை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், சிங்காரா வனப்பகுதியில் முதுகில் காயமடைந்த ஒரு யானை அருகில் மசினக்குடியில் அமைந்திருக்கும் விடுதிப்பகுதிக்கு வந்துள்ளது. அப்போது சில சமூக விரோதிகள் எரியும் டயரை யானை மீது வீசியுள்ளனர். அந்த டயர் யானையில் காதில் தாக்கி கடுமையாக எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் வெப்பம் தாங்காத யாணை அலறிக்கொண்டே ஓடுகிறது. யானை எரியும் டயருடன் கத்திக்கொண்டே ஒடும் காட்சி பார்ப்பவர்கள் மனதை பதறவைக்கிறது.
View this post on Instagram
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில். சமூக விரோதிகளின் இந்த செயலால் படுகாயமடைந்த யானை தொடர் சிகிச்சைக்காக, யானைகள் முகாம்களுக்கு அழைத்து, செல்லும் வழியில் யானை உயிரிழந்தது.
யானையின் முதுகில் ஏற்பட்ட காயம், நுரையீரல் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தி, அதன் காரணமாக உடல் பலவீனமடைந்து இறந்துள்ளது’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் யானை மீது டயர் வீசியது தொடாபாக பிரசாத்(36) ரேமண்ட்(38) என இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிக்கி ராயன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், யானைக்கு தீவைத்த விவகாரத்தில் ரைமனுக்கு சொந்தமான அந்த விடுதிக்கு உரிமம் இல்லாத நிலையில், தற்போது அந்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.