/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-05-17T165239.374.jpg)
Madras High Court banned on the helicopter tourism in Ooty, planned as part of the ongoing summer festival in the Nilgiris Tamil News
Madras High Court - heli tourism - Ooty, Nilgiris Tamil News: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 200 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, ஹெலிடூரிசம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை இயக்குவதால், வன விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது, விலங்குகள் வாழும் நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தினால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இதுபோன்ற வணிக ரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்து ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.