Nilgiris | Tamilnadu Bjp | Annamalai | Aiadmk: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ் பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்கள் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அரசு வேலை நாட்களில் தினமும் காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை மட்டும் பெறப்படும். வேட்புமனு மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இன்று தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் எல்.முருகன் போட்டியிடும் நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய பெரும் எண்ணிக்கையிலான பா.ஜ.க-வினருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் எல்.முருகன் உள்ளிட்டோர் பேரணியாக சென்றனர். அதே நேரத்தில், அ.தி.மு.க-வினர் சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் போட்டியிடும் நிலையில், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உட்பட ஏராளமான அ.தி.மு.க-வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டனர்.
அப்போது பா.ஜ.க-வினர் தாங்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடியப் போகிறது என்கிற கோபத்தை அ.தி.மு.க-வினர் பக்கம் வெளிப்படுத்தினர். இதனால் அ.தி.மு.க- பாஜகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பா.ஜ.க-வினர் மோடி, மோடி, மோடி என முழக்கம் எழுப்பினர்.
இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவிய நிலையில், போலீசார் இரு தரப்பினரும் பேரணியாக செல்ல தடை விதித்தனர். இதையடுத்து, உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பா.ஜ.க-வின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், அ.தி.மு.க-வினரும் உரிய பாதுகாப்பு அளிக்காமல் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக கூறி மற்றும் அக்கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் உதகை - கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு கட்சியினரையும் அப்பகுதியில் இருந்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இருப்பினும், தடியடி நடத்தி விரட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டோம் என எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அ.தி.மு.க - பா.ஜ.க-வினர் மீது போலீசார் தடியடி: நீலகிரியில் தொடரும் பரபரப்பு - வீடியோ!https://t.co/gkgoZMHWlc | #LokSabhaElections2024 | #Nilgiris | #ADMK | #BJP | @EPSTamilNadu | @AIADMKOfficial | @annamalai_k | @BJP4TamilNadu | @Murugan_MoS pic.twitter.com/xzMyJwyTjK
— Indian Express Tamil (@IeTamil) March 25, 2024
Once a Cop, Always a Cop!! 🔥pic.twitter.com/8z2gDQu3Pv
— இந்தா வாயின்கோ - Take That 👊 (மோடியின் குடும்பம்) (@indhavaainko) March 25, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.