தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
அக்.1ம் தேதி தொடங்கி நவ.3ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் இயல்பை விட 19% அதிகமாக மழை பெய்திருக்கிறது. இந்த நாட்களில் 253.1 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 301.1 மி.மீ மழை பெய்திருக்கிறது. மழை காரணமாக ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று (நவ.4) காலையும் கனமழை பெய்ததால் குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மாவட்ட நிர்வாகம் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து மக்கள் புகார் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவித்துள்ளது. கட்டணமில்லா எண் 1077, 0423- 2450034, 0423- 2450035 தொடர்பு கொள்ளலாம் என்றும் வாட்ஸ்அப் எண் 9943126000 மூலமும் தகவல் தெரிவிக்கலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“