scorecardresearch

டாஸ்மாக் கொள்ளை: போலிசார் துப்பாக்கிச் சூடு: என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற நிலையில், காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

police
police

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற நிலையில், காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள டாஸ்மாக்கில் இருவர், இன்று காலை 5.30 மணிக்கு  கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் குற்றப்பிரிவு காவல்துறை இப்ராஹிம் தலைமையில் 5 காவல்துறையினர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்கள், இரு காவலர்களை கத்தியால் வெட்டியுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் ’சாம்பார்’ மணிக்கு தொடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் இவர் பிடிபட்டார். மற்றவர் தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் வெட்டு காயம்பட்ட காவலர்கள் மற்றும் சாம்பார் மணி, கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கூடலூர் கோட்டாசியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் சம்ப இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்றவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Nilgiris tasmac shop theft police gun fire