Nipah Virus: கேரளாவில் நிபா வைரஸ் பரவிப் பல உயிர்களைக் காவு வாங்கிய நிலையில், கோவை மாவட்டத்தை வைரஸ் தாக்காமல் இருக்கக் கோவை சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் முழுவதும் நிபா வைரசால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். முதலி வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதாக கண்டறியப்பட்டு பின்பு வௌவால்கள் மூலம் பரவவில்லை வேறு காரணம் என்ன என்பது விரைவில் கண்டறியப்படும் என்று தெரிவித்தார்கள். இந்நிலையில் கேரளா அடுத்துள்ள கோவை மாவட்டம் மூலமாகத் தமிழகத்திற்குள் நிபா வைரஸ் ஊடுருவாமல் இருக்க சுகாதாத்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நிபா வைரஸ் அறிகுறிகள் என்ன? தமிழகத்தை தாக்குமா? முழுத் தகவல்கள் இங்கே!
கோவையில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து கோவைக்கு தினமும் நிறைய வௌவால்கள் பறக்கின்றன. எனவே வௌவால்களின் மூலம் வைரஸ் எதுவும் பரவாமல் இருக்க, கோவை வஉசி பூங்காவில் உள்ள வௌவால்களைச் சோதனை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் இதற்காக அச்சம் அடைய வேண்டாம். பயம் ஏற்படும் வகையில் எந்த அறிகுறியும் இல்லை என்றும் முன்னெச்சரிக்கையாகச் சோதனை நடத்தப்படுகிறது என்றும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.