நிர்மலா தேவி வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
Advertisment
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
நிர்மலா தேவி வழக்கு : உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலை
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Advertisment
Advertisements
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், 10 மாதங்களுக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் இருந்து இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த உதவி பேராசிரியர் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், “எங்கள் மீது போடப்பட்டது பொய் வழக்கு. இப்போதைக்கு என்னால் இது பற்றி விவரமாக பேச முடியாது. வழக்கு முடிவுக்கு வந்த பிறகு, இதில் என்ன நடந்தது, எது உண்மை என்று அனைத்தையும் விரிவாக கூறுவேன்.” என்றார்.