3 கட்டைப் பைகளுடன் சிறையை விட்டு வெளியேறினார் நிர்மலாதேவி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nirmala Devi bail, நிர்மலாதேவி

Nirmala Devi bail, நிர்மலாதேவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவாகரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் ஓராண்டாக அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 6 முறை தாக்கல் செய்த மனுவும், நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சிறையை விட்டு வெளியேறினார் நிர்மலாதேவி

இந்நிலையில் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் 7வது முறையாக ஜாமீன் கேட்டு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு அளித்தார்.

ஆனால் ரத்த சொந்தங்கள் இரண்டு பேர் ஜாமீன் கையெழுத்திட வேண்டும் என்ற விதிமுறை இருந்த காரணத்தால், கடந்த ஒருவாரமாக சிக்கல் நீடித்தது. இந்நிலையில் நேற்று அவருடைய தம்பி மற்றும் உறவினர் ஒருவர் கையெழுத்திட்டதை தொடர்ந்து, நீதிமன்றத்தில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு ஜாமினில் விடுவிக்க கோரும் கடிதம் வந்தது.

Advertisment
Advertisements

இதையடுத்து மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று பகல் 12 மணியளவில் கைகளில் 3 கட்டைப் பைகளுடன் நிர்மலா தேவி ஜாமீனில் வெளிவந்தார். சிறையில் இருந்து நிர்மலா தேவியை, அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அழைத்துச் சென்றார்.

Nirmala Devi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: