“கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் ஒரு வார்த்தைகூட பேசாதது அதிர்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே?” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில், மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவத்துக்குப் பிறகு, விஷச் சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு மாநிலம் முழுவதும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலிகள் குறித்து எதிர்க்கட்சிகள் தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், “கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் ஒரு வார்த்தைகூட பேசாதது அதிர்ச்சி அளிக்கிறது. காஙிரஸ் தலைவ மல்லிகார்ஜுன் கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே?” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: “கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து காங்கிரஸ் ஒரு வார்த்தைகூட பேசாதது அதிர்ச்சி அளிக்கிறது. காஙிரஸ் தலைவ மல்லிகார்ஜுன் கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே? பிற்படுத்தப்பட்டோர் விஷச் சாராயத்தால் இறக்கும்போது, ராகுல் காந்தியிடமிருந்து ஒரு அறிக்கைகூட வரவில்லை” என்று விமர்சித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“