New Update
00:00
/ 00:00
சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஏப்ரல் 13) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு நல்லது ஒன்றும் செய்யவில்லை. திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஒரு லட்சத்து எழுபத்தி ஓராயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பேர் போனது. அது போல் நிலக்கரி ஊழல், வங்கியில் கடன் கொடுத்த ஊழல் ஆகிய பத்து வருட காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்தியா நிலைகுனந்து போனது. அப்பொழுது இந்தியா முன்னேற்றத்தில் கீழே 50-வது இடத்தில் இருந்தது.
கடந்த 2020 பிரதமர் மோடி ஆட்சி சமயத்தில் கொரோனா தொற்று மிக அதிகமாக இருந்த காலத்தில் பிரதமர் மோடி நிர்வாக திறமை மூலம் கட்டுக்கு கொண்டு வந்தார்.
அப்பொழுது இந்தியா மூன்றாவது இடத்திற்கு வந்தது. கடந்த பத்து வருட பாஜக ஆட்சியில் ஊழல் பக்கமே வராமல் ஆட்சி செய்தவர் பிரதமர் மோடி. காங்கிரஸ் கூட்டணி ஆளும்போது ஒன்றும் செய்யவில்லை. இப்பொழுதும் செய்ய முடியாது. உலகிலேயே இளைஞரணி வேலை வாய்ப்பு உலகில் 100 இடங்களில் உள்ளது. அதில் 50 இந்தியாவில் உள்ளது. 2019 ஆம் ஆண்டில் பாதுகாப்பு பொருட்களை செய்யும் சிறு தொழில் திட்டங்களால் இருபதாயிரம் கோடி அந்நிய செலவாணி இந்தியாவுக்கு கிடைத்தது.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டங்கள் இல்லை. தமிழகத்து இளைஞர்களுக்கு போதை பொருட்களை கொடுத்து அவர்களை நிதானம் இழக்க செய்து இளைஞர்கள் மண்ணை தின்னும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.
போதைப் பொருட்களை விற்பனை செய்பவருடன் திமுகவினர் சேர்ந்து ஆதாயம் சம்பாதிக்கின்றனர். மக்கள் ரத்தத்தை போதை பொருள் மூலம் உறிஞ்சுபவர்களை நடராஜர் மேல் ஆணையாக சொல்கிறேன் அவர்கள் அழிந்து போவார்கள். அவர்களை எங்கே வைக்க வேண்டும் என மக்கள் நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
கடந்த இரண்டு வருடமாக மக்கள் சேவை செய்ய வந்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை பார்த்து எதிரணியினர் பயந்து போய் உள்ளனர். அரசியல் திமிர் காரணமாக அண்ணாமலையை பற்றி வாய் சவடாலக அரசியல் திமிருடன் பேசி வருகின்றனர். 10 வருட பிரதமர் மோடி ஆட்சியில் மத்திய அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டு உள்ளதா?" என நிர்மலா சீதாராமன் பேசினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.