/indian-express-tamil/media/media_files/2024/12/16/7ULTd6fyjuMl5ffPmCzO.jpg)
அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட் - அமல்படுத்த கோர்ட் ஆணை
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.03-க்கும், டீசல் 92.61 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 04, 2025 17:38 IST
அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட் - அமல்படுத்த ஆணை
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை செப்.15ல் அமல்படுத்த சென்னை காவல்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007 முதல் 2009-ல் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் சொத்துகள் சேர்த்ததாக 2011-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
- Sep 04, 2025 17:33 IST
ஆசிரியர்களை தி.மு.க. அரசு கைவிடாது: அன்பில் மகேஸ்
தகுதி தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர்கள் அச்சப்பட தேவையில்லை. ஆசிரியர் பணியில் தொடர தகுதி தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பு குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களை ஒரு போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கைவிடாது. தகுதி தேர்வு கட்டாயம் என்பது நமது கல்வித்துறைக்கு விடப்பட்ட சவால்; சவாலில் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.
- Sep 04, 2025 17:32 IST
உயர்கல்வி மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியீடு
உயர் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். உயர்கல்விக்கான மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
- Sep 04, 2025 17:30 IST
காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்: அமல்படுத்த உத்தரவு
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திருமப் பெறும் திட்டத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 15 மாவட்டங்களில் அமலில் உள்ளது என்றும், திரும்ப பெறப்பட்ட பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.25 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்றும் டாஸ்மாக் தரப்பில் வாதிடப்பட்டன.
- Sep 04, 2025 17:15 IST
சென்னை: 31,500 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
சென்னையில் இதுவரை 31,500 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு மண்டலம் வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மெகா ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
- Sep 04, 2025 17:14 IST
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடைபெறுகிறது. அனுமதியின்றி இயங்கும் ஆம்னி பேருந்துகளை கண்டறிந்து அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- Sep 04, 2025 17:14 IST
சென்னையில் 6 விமானங்கள் திடீரென ரத்து; பயணிகள் அவதி
சென்னையில் 6 உள்நாட்டு விமானங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ரத்து; பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வரும் 3 விமானங்கள் ரத்து. மும்பை, அந்தமான், ஷிவமுகா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி. நிர்வாக காரணங்களால் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
- Sep 04, 2025 17:11 IST
நடிகர் பருத்தி வீரன் சரவணன் மீது முதல் மனைவி பகீர் புகார்
தானும், சரவணனும் கடந்த 1996 முதல் 2003ஆம் ஆண்டு வரை திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து, அதன் பின்பு 2003இல் திருமணம் செய்து கொண்டோம். எனக்கு பராமரிப்பு தொகையாக ரூ.40 லட்சம் தருவதாக கூறியும் அவர் ஏமாற்றி விட்டார் என்று அவரது முதல் மனைவி புகார் கூறி உள்ளார்.
- Sep 04, 2025 17:09 IST
சென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு
சென்னை ஐகோர்ட்டில் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற விசாரணை அறைகள், வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- Sep 04, 2025 17:02 IST
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை
அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க, தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புக் குழுக்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், மற்றும் போக்குவரத்துச் சோதனைச் சாவடி ஆய்வாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர், அனுமதிக்கு அப்பாற்பட்டு அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளைத் தீவிரமாகச் சோதனையிட்டு, அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, வரி வசூலும் செய்யப்படுகிறது.
- Sep 04, 2025 16:59 IST
செப். 13-ம் தேதி திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணம்
செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது
- Sep 04, 2025 16:13 IST
டி.டி.வி தினகரனுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது - செல்வப்பெருந்தகை
டி.டி.வி தினகரனுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது; இந்த மண்ணை நேசிக்கும் தலைவர்கள் யாரும், பா.ஜ.க-வோடு கூட்டணி வைக்க விரும்பமாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்
- Sep 04, 2025 16:12 IST
புதிய தொற்று இல்லை; பதற்றம் வேண்டாம் - அமைச்சர் மா.சு
தமிழ்நாட்டில் புதிய நோய் தொற்று எதுவும் இல்லை. மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- Sep 04, 2025 16:10 IST
நல்லக்கண்ணு நலமுடன் உள்ளார் - அமைச்சர் மா.சு
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு நலமுடன் உள்ளார். நல்லக்கண்ணுவுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் சுவாசத்தை எளிதாக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்
- Sep 04, 2025 16:01 IST
இ.பி.எஸ்.ஸுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
"ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரிக் குறைப்பை வரவேற்று பாஜகவின் குரலாக பேசுகிறார் இபிஎஸ். மாநில அரசின் வருவாயை, நிதிச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தாதது ஏன்? தமிழ்நாட்டின் உரிமை, கூட்டாட்சி நீதிக்காக இபிஎஸ் குரல் தர வேண்டும்," என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
- Sep 04, 2025 15:23 IST
நிதி ஒதுக்கீடு
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடத்தில் முதற்கட்டமாக சுங்குவார் சத்திரம் வரை பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. 27.9 கி.மீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- Sep 04, 2025 15:02 IST
தெரு நாய்கள் விவகாரம்- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
வெளிநாடுகளில் தெரு நாய் பிரச்சனை எவ்வாறு கையாளப்படுகிறது? என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு அதை நம் நாட்டில் பின்பற்றலாம். ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எங்கு பராமரிக்கப் போகிறீர்கள்? காப்பகங்கள் அமைக்கப்பட்டால், நாய்களுக்கு உணவளிக்கச் செல்வதற்கு யாருக்குத் தைரியம் உள்ளது? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- Sep 04, 2025 14:35 IST
பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? அன்புமணி ராமதாஸ்!
பட்டியலின பணியாளரை திமுவினரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்க செய்வது தான் திமுக கடைபிடிக்கும் சமூகநீதியா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். பட்டியலின அதிகாரியை அவமதித்த திமுகவினர் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர, அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை; அவர்கள் மீது திமுக தலைமையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மூலம் அவர்களின் செயலை திமுக தலைமை ஆதரிக்கிறதா? என்பது தெரியவில்லை. திண்டிவனம் நகராட்சி நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி ராமதாஸ்!பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா?
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 4, 2025
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்!
திண்டிவனம் நகராட்சியில் திமுக நகர்மன்ற உறுப்பினரின் சட்டவிரோத ஆணைகளுக்கு பணிய மறுத்ததற்காக அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும்படி, பட்டியலினத்தைச்… - Sep 04, 2025 14:31 IST
டிரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதமானவை என்ற அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள தேசிய அவசரநிலையைச் சமாளிக்கவே, ரஷ்யா எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்கு எதிராக வரிகளை விதித்தோம் எனவும் வாதிட்டது.
- Sep 04, 2025 13:57 IST
தெரு நாய்கள் பிரச்னை: இரு தரப்பையும் பேலன்ஸ் செய்த மிஸ்கின்
தெரு நாய்கள் பிரச்னை குறித்து சென்னையில் பேசிய இயக்குனர் மிஷ்கின், முன்பெல்லாம் தெருவுக்கு 2 நாய்கள் இருந்தன. இப்போது பெருகிவிட்டன. குழந்தைகளையும், பெரியவர்களையும் கடிக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்தான். ஆனாலும் உயிர் வதை கொடுமையானது. வல்லுநர்கள் கலந்தாலோசித்து இருதரப்பிற்கும் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களுக்கு அதிகப்படியாக கருத்தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
- Sep 04, 2025 13:34 IST
இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்: மத்திய அரசு அனுமதி
2015-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதிக்கு முன்பு, இந்தியாவிற்கு வந்து இந்திய அரசிடம் சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், உள்ள தண்டனை விதிகளில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது,
- Sep 04, 2025 12:35 IST
2025 தேசிய நிறுவனங்களின் தரவரிசை பட்டியல்: சென்னை ஐஐடி முதலிடம்
என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தரவரிசை - சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. 2025 தேசிய நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையி்ல, இதில் சென்னை IIT மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம். 2வது இடம் பிடித்துள்ளது, மும்பை ஐஐடி 3வது இடம்,டெல்லி ஐஐடி 4வது இடம் பிடித்துள்ளது
- Sep 04, 2025 12:33 IST
ஆட்டோ சங்கர் வழக்கை விசாரித்த உதவி ஆய்வாளருக்கு பதவி உயர்வு குறித்து ஐகோர்ட் முக்கிய உத்தரவு
ஆட்டோ சங்கர் வழக்கை விசாரித்த உதவி ஆய்வாளர் பவுன்-க்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Sep 04, 2025 11:57 IST
சூதாட்ட செயலி விளம்பரம் - ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்
சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவை அமலாக்கத்துறை விசாரித்திருந்தது.
- Sep 04, 2025 11:30 IST
அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு நிராகரிப்பு
அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க பொதுச் செயலாளராக பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கு எதிரான 2 வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யபட்டது. 2022 ஜூலையில் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்
- Sep 04, 2025 11:28 IST
“விஜயுடன் மாறிய உறவு’’ - மிஸ்கின் ஓபன் டாக்
"சினிமாவில் இருக்கும் வரை விஜய் தம்பியாக இருந்தார். இப்போது அரசியல் தலைவர் ஆகிவிட்டார். அதனால் அவருடனான உறவே வேறு ஆகிவிட்டது. அவரைப் பற்றி அரசியல் கருத்துக்களை நான் சொல்ல விரும்பவில்லை." என விஜய் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு மிஷ்கினின் பதில் அளித்துள்ளார்.
- Sep 04, 2025 10:54 IST
``ஜீவனாம்சம் தேவையில்லை’’ - ஐகோர்ட் அதிரடி
சென்னையை சேர்ந்த டாக்டர் தம்பதி விவாகரத்து வழக்கில், இடைக்கால ஜீவனாம்சமாக மனைவிக்கு ரூ.30 ஆயிரம் வழங்குமாறு குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த நீதிமன்றம், மனைவிக்கு அதிக சொத்துக்களும், வருமானமும் இருக்கும் பட்சத்தில் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை எனக் கூறி அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
- Sep 04, 2025 10:42 IST
சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை - தமிழ்நாடு அரசு அரசாணை
சிறுபான்மையின மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை வழங்க புதிய திட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒருவருக்கு 36 லட்சம் வீதம் ஆண்டுக்கு 10 பேருக்கு வழங்க 3.60 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
- Sep 04, 2025 09:53 IST
எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்
டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள். பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என கூறியது நடக்கிறது. பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி விலகிய நிலையில் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
- Sep 04, 2025 09:52 IST
ஐபிஎல் டிக்கெட் விலை மேலும் உயர்கிறது.. ஜிஎஸ்டி 28%லிருந்து 40% ஆக அதிகரிப்பு
ஐ.பி.எல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி 28% லிருந்து 40% ஆக உயர்ந்துள்ளது. கசினோ, ரேஸ் கிளப்புகளுக்கும் 28% லிருந்து 40% ஆக அதிகரித்துள்ளது.
- Sep 04, 2025 09:50 IST
தினகரன் விலகல் - கருத்து கூற செங்கோட்டையன் மறுப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகல் குறித்த கேள்விக்கு கருத்து கூற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். அனைத்து விஷயங்களுக்கும் நாளை பதில் சொல்கிறேன் என செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
- Sep 04, 2025 09:27 IST
ஆசிரியர் தகுதித் தேர்வு - பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பள்ளிக்கல்வித் துறை இன்று முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஆசிரியர் சங்கங்களுக்கு அவசர அழைப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்திற்கு பிறகு டெட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
- Sep 04, 2025 09:24 IST
இரண்டு பக்கத்தையும் பார்க்கணும் - இயக்குநர் மிஷ்கின்
மனிதர்களுக்கு கருத்தடை செய்ததைபோல் நாய்களுக்கு பண்ண முடியாமல்போனதால் அது பெருகிவிட்டது. உயிர்வதை கொடுமையானது. அதேநேர்ரத்தில் நாய்களால் வரும் பாதிப்புகளை தடுக்கவும் வேண்டும். இந்த விஷயத்தில் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
- Sep 04, 2025 08:58 IST
வணிகம் எளிதாகும் -மோடி
ஜிஎஸ்டி சீர்திருத்தம் சாமானியர், விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரியை 2 அடுக்குகளாக குறைத்ததால் வணிகம் செய்வது எளிதாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- Sep 04, 2025 08:54 IST
விஜய் கடுமையான உழைப்பாளி - இயக்குநர் மிஷ்கின்
தம்பி விஜய் இப்போது அரசியல் கட்சித் தலைவராகிவிட்டார். என்னைப் பொறுத்தவரை அவர் கடுமையான உழைப்பாளி. ரொம்ப நல்ல மனுசன். அரசியலாக இதை முலாம் பூச வேண்டாம் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
- Sep 04, 2025 08:52 IST
ஆக்ஸ்போர்டில் பெரியார் படம்
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கலை இயக்குநர் தோட்டா தரணி வரைந்த பெரியார் உருவப்படத்தை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பெரியாரின் மரபு மற்றும் திராவிட சிந்தனையின் தாக்கம் குறித்து ஆக்ஸ்போர்டில் முதல்வர் உரையாற்றுகிறார்.
- Sep 04, 2025 08:19 IST
வீடுகளில் வெளிநாட்டு நாய்கள்; தெருவில் நம்நாட்டு நாய்கள் - சீமான்
கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் வெளிநாட்டு நாய்களை வீட்டுக்குள் வளர்க்கத் தொடங்கியதால், நமது நாட்டு நாய்கள் தெரு நாய்கள் ஆகிவிட்டன என்று தெரிவித்துள்ளார்.
- Sep 04, 2025 07:53 IST
இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
தமிழ்நாடு - இங்கிலாந்து கூட்டாண்மையை ஆழப்படுத்துவது குறித்து இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார். எரிசக்தி, தகவல் தொழில்நுட்ப துறைகளில் இங்கிலாந்தின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முதலமைச்சர் அழைத்துள்ளார்.
- Sep 04, 2025 07:51 IST
பீகார் தேர்தல்தான் காரணமா? - ப.சிதம்பரம் கேள்வி
ஜி.எஸ்.டி விகிதக் குறைப்புகள் வரவேற்கத்தக்கது என்றாலும் 8 ஆண்டுகள் தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி அடுக்குகள் குறைப்புக்கு பீகார் தேர்தல்தான் காரணமா? ட்ரம்ப் விதித்த வரி, அல்லது நாட்டில் நிலவும் மந்தமான வளர்ச்சி ஆகியவைதான் காரணமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
- Sep 04, 2025 07:49 IST
நான் அப்படி பேசவே இல்லை - பிரேமலதா விஜயகாந்த்
அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
- Sep 04, 2025 07:32 IST
மருந்துகளுக்கு 0% ஜிஎஸ்டி
தொலைக்காட்சி, ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மருந்துகள், தனிநபர் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- Sep 04, 2025 07:29 IST
ஜி.எஸ்.டி வரி விதிப்பு
கேக், பிஸ்கட் போன்ற பொருட்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாஸ்தா, மக்ரோனி, நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை, நிறமூட்டி, சக்கரை கட்டிகளுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. AC, TV, Monitor,projector மற்றும் பாத்திரம் கழுவும் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சமைக்க தயார் நிலையில் உள்ள மீன்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கான வரி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. டயப்பர், நாப்கின்ஸ், பீடிங் பாட்டில், பாத்திரங்கள், தையல் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. விவசாய இயந்திரமான டிராக்டர் டயர்ஸ் மற்றும் உதிரி பாகங்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த மேப்ஸ், சார்ட்ஸ், க்ளோப், நோட் புக்ஸ், ரப்பர், பென்சில் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- Sep 04, 2025 07:26 IST
வரி விதித்து எங்களை கொல்கிறது இந்தியா - ட்ரம்ப்
இந்த உலகில் வரி விதிப்பு பற்றி என்னை விட நன்றாக புரிந்து கொண்டவர், வேறு எவரும் இல்லை. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இப்போது அமெரிக்காவுக்கு வரி விதிக்கப்படாது என்று சலுகை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. நாம் வரி விதிக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஒருபோதும் இந்த சலுகையை அறிவித்திருக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- Sep 04, 2025 07:25 IST
ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கும் அமெரிக்க வரி விதிப்புக்கும் தொடர்பு இல்லை! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கும் ஜி.எஸ்.டி சீர்திருத்த முடிவுக்கும் தொடர்பு இல்லை. இது குறித்து கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஆலோசித்து வந்தோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.