Nirmala Sitharaman | Lok Sabha Election | சென்னை பல்லாவரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயங்களை தேர்தலுக்காக தான் பேச வேண்டும் என்பது இல்லை. இதுபோன்ற விஷயங்களை எப்போது வேண்டும் என்றாலும் பேசலாம்.
அது நமது உரிமை. கச்சத்தீவு தொடர்பாக 50 ஆண்டுகளாக உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து, “கச்சத்தீவு நமது மீனவர்கள் வாழ்க்கையின் ஓர் அங்கம்” என்ற நிர்மலா சீதாராமன், “கச்சத்தீவு தொடர்பாக பொறுப்பில்லாத பேச்சுகள் பேசப்படுகின்றன” என்றார்.
மேலும், “இந்த விவகாரத்தில் 10 ஆண்டுகளாக என்ன செய்தோம் எனக் கேட்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது விசாரணைக்கு வரும்போதே இதைப்பற்றி பேச முடியும்” என்றார்.
ரூ.500 கோடி என்ன ஆச்சு?
இதையடுத்து, சென்னைக்கு கொடுத்த ரூ.500 கோடி என்ன ஆச்சு என தி.மு.க.வை பார்த்து நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “சென்னைக்கு ரூ.5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழ்நாட்டுக்கு ரூ.900 கோடியை ஒதுக்கினோம்.
இந்த இரண்டு நிதிகளையும் தமிழ்நாடு அரசு என்ன செய்தது. ஏற்கனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும். ரூ.5000 கோடியை முறையாக செலவிட்டிருந்தால் மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது” என்றார்.
தொடர்ந்து, போதைப் பொருள் பற்றி குறிப்பிடுகையில், தமிழ்நாட்டின் நிலையை பார்த்தால் கண்ணீர் வருகிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“