ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
எல்லா வருடமும் பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும். சில வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டை தடை இருந்தது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சமீப காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜல்லிகட்டு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ” சங்ககால தமிழ் இலக்கியமான கலித்தொகையில் , ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள், சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்களுடன் ஒப்பிட்டு உவமைப்படுத்தப்பட்டுள்ளன. அக்கால மக்களின் வாழ்க்கை இப்படியிருக்க, அதனை வேறுவிதமாக காட்டுவது தீய உள்நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது” என்று பதிவிட்டுள்ளார்.
டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் எழுதிய ’ஜல்லிகட்டு ஒரு சனாதனத் திருநாள்’ என்ற கட்டுரையை பகிர்ந்து, இந்த கருத்தை நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.