CM stalin | Nirmala Sitharaman | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மத்திய அரசு ஜி.எஸ.டி. நிலுவை தொகையை விடுவிக்கவில்லை” எனக் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தினமலர் காலை நாளிதழுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் நிர்மலா சீதாராமன் அந்தப் பேட்டியை பகிர்ந்து, “உண்மையில், ஜி.எஸ்.டி.,யால் மாநிலங்களுக்கு நன்மை தான் ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.,க்கு முன் 2012-15 காலக்கட்டத்தில் மாநிலங்களின் சராசரி வருவாய் வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி.,க்கு பின் 14.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஜி.எஸ்.டி.,க்கு முன் வரி வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு 12.30 சதவீதமாக இருந்ததாக, தமிழக வணிக வரித்துறை தெரிவித்துள்ளதாக நாளிதழில் வாசித்தேன்.
ஜி.எஸ்.டி.,க்கு பின் தமிழகத்தின் வரி வருவாய் வளர்ச்சி 14.80 சதவீதம் என்றாலும், தமிழக அரசுக்கு லாபம் தானே! இது தவிர, 'டேக்ஸ் பாயன்ஸி' எனப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வரி வருவாய் வளர்ச்சி, ஜி.எஸ்.டி.,க்கு பின் செம்மையாகி உள்ளது. முன்பு பொருளாதார வளர்ச்சியை விட மெதுவாகத்தான் வரி வருவாய் வளர்ந்து வந்தது. இப்போது பொருளாதார வளர்ச்சியைவிட வேகமாக வளர்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மு.க. ஸ்டாலின், “0-06-2022 முதல் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை நிறுத்தி விட்டார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது” என குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“