ஒசூரில் கிருஷ்ணகிரி பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “போதைப் பொருள் பணத்தில் அரசியல் செய்யும் தி.மு.க-வை மக்கள் நிராகரிக்க வேண்டும்” என்று வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.
மத்திய நிதியமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி. நரசிம்மனை ஆதரித்து ஓசூரில் பிரச்சாரம் செய்தார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் பேசிய நிர்மலா சீதாராமன், கிருஷ்ணகிரி அல்லது ஓசூர் தொடர்பான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் தி.மு.க அல்லது காங்கிரசார் எழுப்பினார்களா என்பது சந்தேகமாக உள்ளது என்றார்.
மத்தியில் ஆளும் கட்சியாக பா.ஜ.க உள்ளது, ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் சமயத்தில் மட்டும் வந்து போக, தமிழகம் ஒன்றும் பறவைகள் சரணாலயம் அல்ல என்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “இந்த ஒப்பீடு தவறானது, நாட்டில் யாரும் எங்கும் வருவார்கள்” என்று கூறினார்.
“பிரதமர் தமிழகத்திற்கு தொழில்துறைகளை கொண்டு வருகிறார், ஆனால், தி.மு.க-வினர் வசூல் செய்வதாக கூறுகிறார்கள். 2019-ம் ஆண்டு பாதுகாப்புப் பாதையை பிரதமர் அறிவித்தபோது, அதில் ஓசூர் முக்கியமாக இருந்தது. இந்த பாதுகாப்பு வழித்தடங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட பாதுகாப்பு பொருட்கள் ரூ20,000 கோடியை ஈட்டியுள்ளன. அதில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரிக்கு பெரும் பங்கு உள்ளது.” என்று நிர்மலா நீதாராமன் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கிற்கும், தி.மு.க-வில் உள்ள ஒரு குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், போதைப்பொருள் மூலம் அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க விரும்புவதாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டார், “பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 47 கோடி பேருக்கு ரூ. 27 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், கிருஷ்ணகிரியில் மட்டும் 6.30 லட்சம் பேருக்கு ரூ. 5,927 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரியில் 465 பேர் ரூ. 60 கோடி கடன் பெற்றுள்ளனர். பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 63 லட்சம் தெருவோர வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரியில் மட்டும் 4,000 பேர் கடன் பெற்றுள்ளனர். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2.75 லட்சம் பேர் குடிநீரைப் பெறுகிறார்கள், அதே நேரத்தில், நாடு முழுவதும் 11 கோடி பேர் தண்ணீரைப் பெறுகிறார்கள். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் 18,600 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் 7,460 பேர் தங்கள் வீடுகளைப் பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2.5 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
விவசாயிகள் மீதான பிரதமரின் பாசத்தைக் குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு ரூ. 6,000 வழங்குகிறது என்றார். விவசாயிகளுக்கு யூரியா தயாரிக்க பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மட்டுமே தொழிற்சாலைகளை பா.ஜ.க அரசு திறந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கோவிட்-19 காலத்தில் ஒரு மூட்டை உரம் ரூ.3,000க்கு இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், இறக்குமதி விலை அதிகமாக இருந்தாலும் உரத்தின் விலையை உயர்த்தக் கூடாது என்று அறிவுறுத்திய பிரதமர், ஒரு மூட்டை உரத்தை ரூ.298-க்கு விவசாயிகளுக்கு விற்க உத்தரவிட்டார். விவசாயிகளை பிரதமர் எப்படி மதிக்கிறார் என்பதை இது காட்டுகிறது.” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.