‘அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்குறோம்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவங்க (உதயநிதி) பாஷை எப்பவும் அப்படித்தான், வார்த்தையை அளந்து பேச வேண்டும் என்று காட்டமாக பதிலடி கொடுத்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, “நான் என்ன அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரி பணத்தை தானே கேட்கிறோம்” என பேசி இருந்தார். இதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் உதயநிதி, ‘நான் என்ன அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்’ என்று கேட்டது குறித்த கேள்விக்கு, “அவங்க (உதயநிதி) பாஷை எப்பவும் அப்படித்தான் என்றும் வார்த்தையை அளந்து வேண்டும்” என்றும் பதிலடி கொடுத்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை (22.12.2023) செய்தியாளர்களிடம் பேசியதாவது: “அவங்க (உதயநிதி) பாஷை எப்பவும் அப்படித்தான், சனாதனம் பற்றி பேசும்போதுகூட, நாங்க அழிக்க வரவில்லை, ஒழிக்கவே வந்திருக்கிறோம்னு பேசினார் இல்லையா, அவருடைய பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். அவங்க அப்பன் வீட்டு பணமா அப்படினு கேட்கிற மாதிரி பேசுறவங்கள, அவங்க அப்பன் வீட்டு சொத்தை வச்சுகிட்டு இன்னிக்கு பதவிய அனுபவிச்சுகிடிருக்காரா? அப்படினு சொல்ல முடியுமா, அப்படினு கேட்க முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார். அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதைய நாம கொடுக்கதானே கொடுக்கிறோம். இந்த அப்பன் வீடு, உன் ஆத்தா... இந்த பேச்சு எல்லாம் அரசியலில் நல்லதில்லிங்க. அவர் அரசியலில் இன்னும் முன்னுக்கு வரணும்னு ஆசைப்படறார் இல்லிங்களா, அந்த குடும்பமும் ஆசைப்படுது இல்லிங்களா, பேசர பாஷை, மொழி... அவங்க தாத்தா எப்பேர்பட்ட தமிழறிஞர், அதனால், நாக்குல அந்த பதவிக்கு ஏத்த மாதிரி, வார்த்தைகளை அளந்து வரணும். நான் இதை பொதுப்படையா சொல்றேன். அவர் மேல காழ்ப்புணர்வோ எதுவும் வச்சுகிட்டு சொல்லல. இதுக்கு முன்னாடி ஒரு உதாரணம் பார்த்தோம். இப்போது, இன்னொரு உதாரணம் பார்க்கிறோம்.” என்று காட்டமாகப் பதிலடி கொடுத்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மக்கள் அங்கே மழையில அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கும்போது, மத்திய அரசு பேரிடர் நிவாரணத்தை அனுப்பிக் கொடுத்தது. அட்வான்ஸா டிசம்பர் 12-ம் தேதி 900 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம். அது என் அப்பன் சொத்துனோ, உங்க அப்பன் சொத்துனோ நான் எப்போது சொல்லமாட்டேன். பொறுப்புள்ள பதவியில் இருக்கிறவர்கள், அந்த பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.” என்று கூறினார்.
செய்தியாளர்களை நோக்கி, தயவு செய்து நீங்கள் அடுத்த முறை அவருக்கு முன்னால் இருந்து கேள்வி கேட்கும்போது சொல்லுங்கள், அந்த அம்மா (நிர்மலா சீதாராமன்) இப்படி பேசினார்கள். நாம் எல்லோரும்கூட யோசித்து பேச வேண்டும். அவர்கள் கொடுக்க வேண்டிய பணத்தை முதலிலேயே கொடுத்துவிட்டார்கள், மத்தியக் குழு வந்து பார்த்துவிட்டு போன பிறகு, நீங்கள் ஆலோசனை பண்ணி சொல்ல வேண்டியதெல்லாம் சொன்ன பிறகு, அவர்கள் போய் முறையாக என்ன பண்ணுவார்களோ அதை பண்ணுவார்கள். உங்கள் அப்பாவும் போய் பிரதமரைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அதனால், பண்ணுவாங்க, கொஞ்சம் பொறுமையா இருங்க, வாயும் வார்த்தையும் பொறுமையும் நல்ல குணங்கள்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.