Advertisment

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்: மோடிக்கு நிர்மலா சீதாராமன் நன்றி

உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் நிறுவப்படும் என மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ.க அறிவித்திருந்த நிலையில் அதை நிறைவேற்றும் வகையில் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
Nirmala Sitharaman thanks PM Modi Thiruvalluvar Cultural Centre in Singapore Tamil News

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் திருவள்ளுவர் கலாசார மையம் குறித்து அறிவித்தார். மேலும் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் நிறுவப்படும் என மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ.க அறிவித்திருந்த நிலையில் அதை நிறைவேற்றும் வகையில்  முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது.

Advertisment

இந்தியாவின் கலாசாரத்தை வெளிப்படுத்த, யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த கலாசார மையம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வின் தேர்தல் அறிக்கையில், இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்த, யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக, பயிற்சி அளிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை நிறுவுவோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் வளமான ஜனநாயக மரபுகளை ஜனநாயகத்தின் தாயாக நினைத்து மேம்படுத்துவோம் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார். "சிங்கப்பூரில் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு, இவற்றை வளர்க்கவும், பேணி காக்கவும், திருவள்ளுவர் கலாசார மையம் ஒன்றை நிறுவ உள்ளதாக அறிவித்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Singapore Pm Modi Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment