Advertisment

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த நிர்மலா சீதாராமன்; மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கோரம்பள்ளம், ஏரல், முறப்பநாடு பகுதிகளை ஆய்வு செய்தார்.

author-image
WebDesk
New Update
Thoothukudi Nirmala visit

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த நிர்மலா சீதாராமன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கோரம்பள்ளம், ஏரல், முறப்பநாடு பகுதிகளை ஆய்வு செய்தார். 

Advertisment

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால், பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நியமித்துள்ளதாக தெரிவித்தார். இதன்படி, விமானம் மூலம் சென்னைக்கு நிர்மலா சீதாராமன் டிசம்பர் 25-ம் தேதி இரவு வந்தடைந்தார்.

இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிசம்பர் 26-ம் தேதி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். 

தூத்துக்குடி வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில், ஆட்சியர் அலுவலகம் சென்றாஅர். அங்கே வெள்ள பாதிப்பை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர், அவரது தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கூடுதல் ஆணையர் பிரகாஷ், அரசு துறை செயலர்கள் ககன் தீப் சிங் பேடி (சுகாதாரம்), அபூர்வா (வேளாண்மை), கார்த்திகேயன் (நகராட்சி நிர்வாகம்), மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர்கள் லட்சுமிபதி (தூத்துக்குடி), கார்த்திகேயன் (திருநெல்வேலி), தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி 72 பக்க மனுவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்தார். 

இதைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி குறிஞ்சி நகர், கோரம்பள்ளம் குளம், அந்தோணியார்புரம் பாலம், முறப்பநாடு கோவில் பத்து பகுதியில் சேதமடைந்த குடிநீர் நீரேற்று நிலையம், ஸ்ரீவைகுண்டம் கோயில், அரசு மருத்துவமனை, பொன்னன்குறிச்சியில் உள்ள வீடுகள், ஏரல் ராஜபதி பகுதியில் பயிர் பாதிப்பு, ஏரல் பாலம், வாழவல்லான் பகுதியில் உள்ள மின்கோபுரம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில், தாமிரபரணி ஆற்றில் உள்ள தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் நீரேற்றும் நிலையத்தில் ஆய்வு செய்தார். இங்கிருந்து தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட நகர்பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கனமழையால் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பைப் லைன் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. மேலும், நீரேற்றும் நிலையத்தில் உள்ள மோட்டார்களும் பழுதடைந்துள்ளது. இதனால், இங்கிருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் நீரேற்றும் நிலையத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அந்த துறையின் அதிகாரிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விளக்கினார்கள்.  

அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தூத்துக்குடி உமரிக்காட்டில் பொதுமக்கள் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்தனர். அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை. சுனாமியை கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என பதில் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment