நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகள்களை மீட்டுத்தர வேண்டுமென கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கு பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன,
Advertisment
இந்த வழக்கு தொடர்பாக நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் பிரயான் பிரயானந்தா, பிரியாதத்துவா ரித்திகிரண் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நித்யானந்தா வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் முதலில் அவர் ஈகுவாடரில் இருக்கலாம் என்று அவரது முன்னாள் சிஷ்யை தெரிவித்திருந்தார். ஆனால், தான் இமயமலையில் உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் நித்யானந்தா.
ஆனால், உண்மையில் அவர் எங்கு இருக்கிறார் என்று பக்தர்கள் தொடங்கி காவல்துறையினர் வரை தேடி வரும் நித்தியானந்தா தினமும் நேரலையில் பக்தர்களிடம் பேசி வருகிறார். இன்றைய தினம் பக்தர்களிடம் பேசிய அவர், செய்தி துறையினர் தனக்கு பல பெயர்கள் வைத்துள்ளதாகவும் சிறு வயதில் "சுமார் சாமி" என்று பெயர் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மத தலைவர்கள் சிலர் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும், அவர்களிடம் பக்தர்கள் ஆவேசம் கொள்ளாமல் பூ பழத்துடன் சென்று உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
இதற்கு முன்பாக மத தலைவர்கள் சிலர் தன் மீது வழக்கு தொடர்ந்ததாகவும் அப்போது தான் பரமஹம்ச நித்தியானந்தாவாக இருந்தாகவும், தற்போது நித்தியானந்த பரமசிவமாக மாறி விட்டதாக அவர் கூறியுள்ளார். தமிழ் பத்திரிகையாளர்கள் வதந்தியை கூட ருசியாக எழுதுபவர்கள் என கூறியுள்ள நித்தியானந்தா, தன்னை பற்றிய நையாண்டிகளை ரசித்து படிப்பதாகவும் கூறியுள்ளார். தன்னை பற்றி சிலர் நெருப்பாற்றி நீந்தி கடப்பவர் என கூறுவதாகவும், ஆனால் நெருப்பாறே தான் தான் என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார்.
திருவண்ணாமலை தீபத்திற்கு தான் வருவேனா இல்லையா என்பதை தெரிவிக்க முடியாது என கூறியுள்ள நித்தியானந்தா தான் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார். தான் நித்யானந்தா என்றும், பிறரின் நெருக்குதல்களை தாண்டி எப்போதும் நிலையாக நிற்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.