டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டது. இதையடுத்து, இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றே டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: PM Modi NITI Aayog Meeting Today Live Updates
மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'மத்திய அரசின் வரி வருவாயில் 50% வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாததால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி மறுக்கப்படுகிறது. 2024 - 2025 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ. 2,200 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி, ஒருதலைப்பட்சமான நிபந்தனைகளை வலியுறுத்தாமல் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்.
காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய ஆறுகளை சுத்தம் செய்து மீட்டெடுப்பது அவசியம், காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும். இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பின் பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட முதல்வர்களுடன் கைகுலுக்கு பேசினார். பிரதமர் மோடி அளவளாவிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-24-at-3.51.04-PM-402560.jpeg)
/indian-express-tamil/media/post_attachments/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-24-at-3.51.03-PM-1-803600.jpeg)
/indian-express-tamil/media/post_attachments/9040f4ae-6dc.jpg)