புதுச்சேரி காங்கிரஸ் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணியினை பற்றியும் அந்த பணி நடைபெறும் போது மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றியும் எப்போது இந்த பணி நிறைவுறும் என்றும் கேட்டிருந்தார்கள்.
அதற்கு மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் . நித்தின் கட்கரி எழுத்துப்பூர்வமான பதிலை மக்களவையில் அளித்தார்கள்.
அதில், தேசிய நெடுஞ்சாலை எண் 45 A விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு வேலை ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வேலை எப்போது முடியும் என்பது தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெரிய பணிகள் நடக்கும்போது சிறு சிறு தொந்தரவுகள் பொதுமக்களுக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
அதுவும் குறிப்பாக பாலங்கள் கட்டும் இடங்களில் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவது இன்றியமையாதது.
இருந்தபோதிலும், எல்லா வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தக்க பாதுகாவலர்கள் ஆங்காங்கே அமர்த்தப்பட்டு போக்குவரத்தை சீர் செய்யப்படுகின்றது.
விழுப்புரம் புதுச்சேரி வரையிலான 29.00 கிலோமீட்டர் தூரம்
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், புதுச்சேரியில் இருந்து பூண்டியாங்குப்பம் வரையிலான 38.00 கிலோமீட்டர் தூரம், 2024 மார்ச் மாதமும், பூண்டியாங்குப்பத்திலிருந்து சட்டநாதபுரம் வரையிலான 56.80 கிலோமீட்டர் தூரம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும், சட்டநாதபுரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரையிலான 55.76 கிலோ மீட்டர் தூரத்தை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“