மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது தொடர்பாக ஆலோசிக்க திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விழாவை எழுச்சியோடும், உணர்ச்சியோடும் ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 3 ஆம் தேதி வட சென்னையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது,
கருணாநிதி கோட்டம்
தொடர்ந்து, கருணாநிதி பெயரில் அமைக்கப்பட்ட கோட்டத்தினை ஜூன் 20ஆம் தேதி பிகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் திறந்துவைப்பார் என்றும் கருணாநிதி சிலைகளை எங்கெங்கு நிறுவலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
தொடர்ந்து, 70 வயதுக்கு மேற்பட்ட கழக முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“