/tamil-ie/media/media_files/uploads/2020/11/Nivar-Cyclone-in-Chennai-2.jpg)
Nivar Cyclone in Chennai 2
Nivar Cyclone, Chennai Rain: இன்னும் சில மணிநேரங்களில் நிவர் புயல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், சென்னையில் பெய்த இடைவிடாத மழையால், பல பகுதிகள் தண்ணீரால் சூழ்ந்தன. எழும்பூர், பாரிஸ், கீழ்பாக்கம், ஓட்டேரி, தண்டையார்பேட்டை, திருவெற்றியூர் உள்ளிட்ட வடசென்னையில் பல பகுதிகளின் சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இருப்பினும், கார்ப்பரேஷன் அதிகாரிகள் தண்ணீரை அகற்ற உடனடியாக முயற்சித்தனர்.
’நிவர்’ கடுமையான சூறாவளி புயலாக மாறும் – புயல் எச்சரிக்கை மையம்
/tamil-ie/media/media_files/uploads/2020/11/Nivar-Cyclone-in-Chennai-1.jpg)
வடிகாலில் ஏற்பட்ட வடிகால் காரணமாக, தேங்கிய மழை நீர் ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை போன்ற பகுதிகளிலும் கழிவுநீரில் கலந்ததாக குடியிருப்பாளர்கள் புலம்பினர். நகரத்தில் ஏற்பட்ட அடைப்புக்கள் மற்றும் மழை நீரை அகற்றுவதற்காக குடிமை அமைப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர். அதே நேரத்தில், சென்னை புறநகர்ப் பகுதிகளான சிட்லபாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் மற்றும் பல்லாவரம் போன்ற ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மிதமான முதல் கடுமையான நீரில் மூழ்கினர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/11/Nivar-Cyclone-in-Chennai.jpg)
சென்னையில் செவ்வாய்க்கிழமை 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்தது, இதனால் நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியது. நுங்கம்பாக்கம் வானிலை நிலையத்தில் 106.5 மி.மீ மழை பதிவானது. மீனம்பாக்கம் நிலையத்தில் 78 மி.மீ மழை பெய்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் குறிப்பிட்ட இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நமக்கல், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிகம் முதல் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.