வெள்ள நீரை அகற்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி

நிவர் புயல் காரணமாக சென்னையில் கன மழை பெய்து வருவதால் வெள்ளநீர் தேங்குவதை தவிர்க்க வெள்ள நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி புதிய நவீன தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் கன மழை பெய்து வருவதால் வெள்ளநீர் தேங்குவதை தவிர்க்க வெள்ள நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி புதிய நவீன தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
Nivar cyclone, nivar cyclone in chennai, Chennai Corporation uses high-tech machines, நிவர் புயல், அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி, வெள்ள நீர், சென்னை வெள்ளம், high tech machines for avert flooding, chennai flooding nivar cyclone flooding in chenai, cm palaniswami

நிவர் புயல் காரணமாக சென்னையில் கன மழை பெய்து வருவதால் வெள்ளநீர் தேங்குவதை தவிர்க்க வெள்ள நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி புதிய நவீன தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறது.

Advertisment

நிவர் புயல் காரணமாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை முதலே தொடர் மழை பெய்துவருகிறது. இதனால், சென்னையில் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதுவரை 40 இடங்களை மரங்களை அப்புறப்படுத்தியதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால், சென்னையின் பல பகுதிகளிலும் மாநகராட்சி நிர்வாகம் புதிதாக மூன்று சக்கர தானியங்கி மரம் வெட்டும் இயந்திரத்தை நிறுத்தியுள்ளது. சென்னை சாலையில் மரம் வெட்டும் இயந்திரம் செல்லும் வீடியோவை முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தடையாக உள்ள குப்பைகளை வெளியே எடுக்கவும், மினி டிராக்டர்களில் பொருத்தப்பட்ட ரோபோ இயந்திரங்களின் படங்களையும், கால்வாய்களில் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்றவும் கால்வாய்களில் இருந்து மண்ணை அகற்ற பயன்படும் இயந்திரங்களையும் முதல்வர் பழனிசாமி பகிர்ந்துள்ளார்.

Advertisment
Advertisements

இது குறித்து முதல்வர் பழனிசாமி, “வேளச்சேரி, அடையாறு, மாம்பலம் போன்ற நீர் வழித்தடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்று முதல்வர் பழனிசாமி படங்களுடன் பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார். மேலும், “அயராது உழைக்கும் ஊழியர்களுக்கு வணக்கம்” என்று மாநகராட்சி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உள்ள நீர்நிலைகளில் உள்ள மண்ணை அகற்றுவதற்காக ஆம்பிபியன்ஸ் மற்றும் ரோபாட்டிக்ஸ் இயந்திரங்களை நிறுத்தியுள்ளதாகவும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் இரவு முழுவதும் வேலை செய்யும் என்று மாநகராட்சி ஆதிகாரிகள் கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Nivar Cyclone Chennai Edappadi K Palaniswami

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: