Advertisment

நிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு?

சென்னை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டியது.

author-image
WebDesk
New Update
Nivar Cyclone Affected Areas

Nivar Cyclone Affected Areas

Nivar Cyclone: கடந்த சில நாட்களாக தமிழகத்தை உலுக்கியது நிவர் புயல். இதனால் சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டது. அதோடு  சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுவை ஆகிய மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது என பல்வேறு விஷயங்களால் 10 லட்சம் பாதிக்கப்படுள்ளனர்.

Advertisment

கொரோனா நோயாளிகளுக்கு அபாயகரமான நுரையீரல் நோய் ஏன்?

வங்ககடலில் கடந்த 18-ம் தேதி உருவான காற்றழுத்தம் தீவிரம் அடைந்து நிவர் புயலாக மாறியது. இந்த புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 2.30 மணி வரை மரக்காணம் அருகே கரையை கடந்தது.

நிவர் புயல் திருவண்ணாமலை, வேலூர் வழியாக தெற்கு ஆந்திராவுக்கு சென்றது. இதனால் புதுவை மற்றும் விழுப்புரம், சென்னை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டியது. பல பகுதிகள் தண்ணீர் மூழ்கின.

மரக்காணம் அருகே புயல் கரையை கடந்த சமயத்தில் புதுச்சேரியில் 30 செமீ மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். புதுச்சேரியின் நகரப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய மரங்கள் சரிந்தன. சின்ன முதலியார் சவாடி, பொம்மையார் பாளையத்தில் 10 வீடுகள் சரிந்தன. திடீர் மழையால் இந்திராகாந்தி சிலையை சுற்றி குளம் போல் தண்ணீர் பெருக்கடுத்தது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம், மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கனமழையால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பலர் வெள்ளநீரில் தத்தளித்தனர். விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியில் சுமார் 500 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம், புதிய பேருந்து நிலையம், சாலமேடு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. விக்கிரவாண்டி-கும்பகோணம் நான்கு வழிச்சாலை பணிகளால் மழைவராயனூர் உள்பட 10 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.

கடலூர் மாவட்டத்தில் புயல் மழை பாதிப்பால் 55,226 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்த மாவட்டம் முழுவதும் 321 மரங்கள் முறிந்து விழுந்தன. கால்நடைகள் பல பலியாகின. குறிஞ்சிப்பாடி, ஜேடர்பாளையம் உள்பட பல பகுதிகளில் 200 எக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன. சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, சித்திரப்பேட்டை பகுதிகளில் கடல்நீர் கிராமத்திற்குள் புகுந்தது. சுமார் 5000 வீடுகள் இதனால் பாதிக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வீடுகள் இடிந்து விழுந்தன. நெல், வாழை உள்பட 30,000 ஏக்கர் பயிர்கள் நாசமானது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. புயல் பாதித்த 4 மாவட்டங்களில் புயல் காரணமாக 77 வீடுகள் இடிந்து விழுந்தன. 47,338 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்தன.

பாலாற்றில் வெள்ளம்… 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக முடிச்சூரில் 2015-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளானது. அதே போல் நிவர் புயலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி, பெரும்பாலான இடங்கள் தெப்பக்குளம் போல் காட்சியளித்தன. வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, சிறுதாவூர், கோட்டூர்புரம், மாம்பலம், புரசைவாக்கம், வியாசர்பாடி, எண்ணூர், ஆர்கே நகர், எண்ணூர் போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தன. இதனால் சுமார் 10 லட்சம் மக்கள் நிவர் புயலால் பாதிக்கப்பட்டு, மின்சாரம் இன்றி, தண்ணீரில் அவதிப்பட்டனர். விழுந்த மரங்களை அகற்றுவதில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். வெள்ள நீர் தேங்கிய பெரும்பாலான இடங்களில் நீர் வடியாமல் இருந்தது. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Nivar Cyclone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment