தமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nivar Cyclone, Indian Navy Coast Guard teams ready for relief, நிவர் புயல், கடலோர காவல் படை தயார், தமிழகத்தில் இந்திய கட்ற்படை தயார், Coast Guard teams ready for rescue operations, tamil nadu nivar cyclone, nivar cyclone in Tamil Nadu, chennai

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், புதன்கிழமை மாலை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்பதால், இந்திய கடலோர காவல் படை மறும் இந்திய கடற்படை பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்ள நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மீனவர்கள் மற்றும் வணிகர்களுக்கு உதவுவதற்காக நான்கு கடலோர காவல்படையின் கடற்படை ரோந்து கப்பல்கள் கடலில் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. புயல் கரையை கடந்த பிறகு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை உடனடியாக விரைந்து செய்வதற்கு 2 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 3 டோர்னியர் விமானங்கள் விசாகப்பட்டினத்தில் கண்காணிப்பு மற்றும் புயல் சேதத்தை மதிப்பீடு செய்வதற்காக காத்திருக்கின்றன.

இது குறித்து கடலோர காவல்படை அதிகாரிகள் கூறுகையில், 15 பேரிடர் நிவாரண குழுக்கள் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி வழங்க தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் இருந்து பேரிடர் மீட்பு மற்றும் உதவிக் குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொள்ள மீட்பு பணி குழுக்களுடன் ஐ.என்.எஸ். பருந்து கப்பலில் இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனுடன் சென்னையில் 5 வெள்ள நீரில் மக்களை மீட்கும் குழுவினரும் வெள்ள நீரில் குதித்து காப்பாற்றும் ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nivar cyclone indian navy coast guard teams ready for relief rescue operations in tamil nadu

Next Story
சென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்chennai corporation relief list of details, சென்னை, சென்னை மாநகராட்சி, சென்னை புயல் நிவராண மையங்கள், நிவர் புயல், சென்னை மக்களுக்கு நிவாரண மையங்கள், chennai Cooking Relief centres, chennai rain affected people, nivar cyclone, nivar cyclone relief centre
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com