Nivar Cyclone Southern Railway Service Alteration : நவம்பர் 24, 25 மற்றும் 26 தேதிகளில் தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக, தெற்கு ரயில்வே ரயில் சேவைகளின் மாற்றங்களை அறிவித்துள்ளது.
வண்டி எண் 06865 / 06866 சென்னை எக்மோர் - தஞ்சாவூர் - சென்னை எக்மோர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06795 / 06796 சென்னை எக்மோர் - திருச்சிராப்பள்ளி - சென்னை எக்மோர் சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதியளவு ரத்து செய்யப்பட்ட சேவைகள்: வண்டி எண் 06232 மைசூரு - மயிலாடுதுறை சிறப்பு ரயில், திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை இடையே நவம்பர் 24-ம் தேதி ரத்து செய்யப்படும்.
வண்டி எண் 06188 எர்ணாகுளம் - காரைக்கால் சிறப்பு ரயில், திருச்சிராப்பள்ளி - காரைக்கால் இடையே நவம்பர் 24-ம் தேதி ரத்து செய்யப்படும்.
வண்டி எண் 02898 புவனேஸ்வர் - புதுச்சேரி சிறப்பு ரயில், சென்னை எக்மோர் - புதுச்சேரி இடையே நவம்பர் 24 அன்று பாதியளவு ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 06231 மயிலாடுதுறை - மைசூரு சிறப்பு ரயில், நவம்பர் 25-ம் தேதி மயிலாடுதுறை - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 06187 காரைக்கால் - எர்ணாகுளம் சிறப்பு ரயில், நவம்பர் 25 அன்று காரைக்கால் - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 02083 / 02084 மயிலாடுதுறை - கோயம்புத்தூர் சிறப்பு ரயில், நவம்பர் 25 அன்று திருச்சி - மயிலாடுதுறை - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 02897 புதுச்சேரி - புவனேஸ்வர் சிறப்பு ரயில், நவம்பர் 25-ம் தேதி புதுச்சேரி - சென்னை எக்மோர் இடையே பாதியளவு ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 02868 புதுச்சேரி - ஹவுரா சிறப்பு ரயில், நவம்பர் 25-ம் தேதி புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நவம்பர் 26, வியாழக்கிழமை ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பில் முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு முழு பணத்தையும் திருப்பித் தரப்படும். மின் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு, ஆட்டோமேட்டிக் ரீஃபண்டு செய்யப்படும். ரயில்வே கவுன்ட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, பயணிகள் ரயில் புறப்பட்ட 15 நாட்களுக்குள் ரயில்வே கவுன்ட்டரில் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாகக் கால அவகாசம் தளர்த்தப்பட்டுள்ளது.
பாதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு தற்போதுள்ள பணத்தைத் திரும்பப்பெறும் விதிகள் நிலவும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"