Nivar Cyclone Status Live: தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழையும் கொட்டி தீர்த்தது.
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவெடுத்தது. இந்தப் புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டது. நிவர் என்றால், வருமுன் காப்பது என அர்த்தம். இந்தப் புயல் காரைக்காலுக்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கும் இடையே 25 ஆம் தேதி இரவு 11.30 மணியில் தொடங்கி 26ஆம் தேதி அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.
நிவர் புயல் தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் படிப்பதற்கு: Nivar Cyclone
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தமிழகத்தின் கடற்கரையோர கிழக்கு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Nivar Cyclone Status Live: வானிலை அறிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளுர் இடையே 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் முன் எச்சரிக்கை, நிவர் புயல் பாதை, நிவர் புயலால் மழை பெய்யும் இடங்கள் உள்ளிட்ட லேட்டஸ்ட் தகவல்களை இந்த லைவ் ப்ளாக்கில் பார்க்கலாம்.
Live Blog
Nivar Cyclone Status : நிவர் புயல் பாதை, நிவர் புயலால் மழை பெய்யும் இடங்கள் உள்ளிட்ட லேட்டஸ்ட் தகவல்களை இந்த லைவ் ப்ளாக்கில் பார்க்கலாம்.
தெற்கு வங்கக் கடலில் வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து மேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிவர்புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர், குப்பைகளை விரைந்து அகற்றி கிருமிநாசினி தெளிக்கவும், மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
சென்னை(மே) மாவட்டம்-ஆயிரம் விளக்கு(கி) பகுதி-மழையால் பாதித்த பச்சையம்மன் சாலை மக்களுக்கு பொறியாளர் அணி மாவட்ட து.அமைப்பாளர் விஆர்.விஜய் ஏற்பாட்டில் உணவு-பால்-பிரெட் வழங்கினோம்.அண்ணன் @Dayanidhi_Maran MP- மா.பொறுப்பாளர்@nchitrarasu, ப.செயலாளர் மா.பா.அன்புதுரை உள்ளிட்டோருக்கு நன்றி pic.twitter.com/O0XBHXDVd0
— Udhay (@Udhaystalin) November 26, 2020
சென்னை(மே) மாவட்டம்-ஆயிரம் விளக்கு(கி) பகுதி-மழையால் பாதித்த பச்சையம்மன் சாலை மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் உணவு-பால்-பிரெட் வழங்கினார் .
சென்னை சைதாபேட்டையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களின் குறைகளை கமல்ஹாசன் கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமி, “நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம். மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது. கடலூரில் சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சுமார் 2.3 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பயிர்க் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடும் பெற்றுத்தரப்படும்.” என்று கூறினார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய தாழ்வு நிலையானது, தென்தமிழகத்திற்கு மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செம்பரப்பாக்கம் ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டால் வராதராஜபுரம் பகுதியை ஒட்டியுள்ள ராயப்பா நகர் மற்றும் மகா லக்ஷ்மி நகர் ஆகிய இடங்களில் தேங்கியுள்ள மழை நீர் வடிந்து விடும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார்.
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீட்புப் பணிகளில் ஈடுபட இந்திய கடலோரக் காவல்படையின் 15 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்தது.
இதேபோல் மீட்புப் பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 25 குழுக்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரபிரதேச மாநிலங்களின் கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதில் 15 குழுக்கள் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
"2015 பெரு வெள்ளத்திலிருந்து அதிமுக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். நிவர் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 ரொக்கமாக வழங்க வேண்டும். வேளாண் விளைபொருள் இழப்பீட்டுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக அரசே வீடு கட்டித் தர வேண்டும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும் .நிவர் புயல் கரையை கடந்த நிலையில் அரசு உத்தரவு . முன்னெச்சரிக்கையாக கடந்த 24ம் தேதி நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கம். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்
அதி தீவிர புயலான நிவர் கரையைக் கடக்கும்போது தீவிர புயலாக வலுவிழந்தது. இதனால் காற்றின் வேகம் எதிர்பார்த்தைவிட 110 முதல் 120 கிமீ அளவில் இருந்தது. எனினும் முழுமையான சேத விவரங்கள் காலையில் தெரியவரும்.
சேத விவரங்கள் குறித்தும், நிவாரணம் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
நிவர் புயல் முழுமையாக கரையைக் கடந்ததாக வியாழக்கிழமை அதிகாலையில் வருவாய் மற்றும் பேரிடர் தடுப்புத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார். நிவர் அதி தீவிர புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்ததாக அவர் தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக புயல் கரையைக் கடந்தது.
நிவர் புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்துகொண்டிருக்கிறது. நிவர் புயலின் மையப்பகுடி கரையை நெருங்கி வருகிறது. புயல் முழுவதுமாக கரையைக் கடக்க அதிகாலை 3 மணி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, கடற்கரையில் கன மழை பெய்து வருகிறது.
புதுச்சேரி - மரக்காணம் இடையே நிவர் புயல் 15 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கிறது. புயல் முழுமையாக கரையைக் கடக்க அதிகாலை 3 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை பெரம்பர்லூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும்.ன்திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இடியுடன் மிதமான மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மனி நேரத்தில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, விழுபுரம், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் கரையைக் கடப்பதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது.புயல் முழுவதுமாக கரையைக் கடப்பதற்கு அதிகாலை 3 மணி ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
புதுச்சேரிக்கு அருகே நிவர் புயலின் வெளிச்சுவர் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. நிவர் புயல் முழுமையாக கரையைக் கடக்க அதிகாலை 3 மணி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே நிவர் புயல் கரையைக் கடப்பதால் புதுச்சேரி, கடலூரில் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் அடுத்த ஒரு மணி நேரத்தில் கரையைக் கடக்கும். நிவர் புயல் தற்போது கடல் மற்றும் நிலப்பரப்பில் மையம் கொண்டுள்ளது. புயல் முழுமையாக கரையைக் கடக்க அதிகாலை 3 மணிக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சதிரன் தகவல் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன், “புயல் - மழை பருவ காலத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்கெனவே தமிழக அரசிடம் அளித்த அறிக்கையைத் தமிழக அரசு செயல்படுத்தாதது ஏன் என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் 7,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வர் ரவிக்குமார் அறிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் அதிக அளவில் திறக்கப்படுவதால் முடிச்சூர் பகுதிக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், தயவு செய்து மக்கள் வெளியே செல்லாதீர்கள் என்று அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீட்டில் இருங்க... வெளியே போகவேண்டாம்! @khushsundar @BJP4TamilNadu #chennairains #Nivarpuyal pic.twitter.com/O4wuqEQut9
— IE Tamil (@IeTamil) November 25, 2020
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால், அடையாறு கரையோரப் பகுதிகளான ராமாபுரம், எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அடையாறு கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மரக்காணம் செய்யூர் இடையே ஆலம்பரை கோட்டை பகுதியில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை நிவர் புயல் 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், 12 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் கண் பகுதி இரவு 11 மணிக்கு கரையைத் தொடும் என்றும் புயல் கரையைக் கடக்க அதிகாலை 3 மணி ஆகும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நிவர் புயல் காரணமாக ந்நாளை நடைபெறவிருந்த NET தேர்வு தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு தேதி http://nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக, சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மூடப்பட்டது. சென்னை விமான நிலையம், கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 6 நாள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிவர் புயல் காரணமாக இன்று சென்னையில் இன்று இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும். இரவு 8 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் இயக்கப்படமாட்டாது. நாளை வானிலையைப் பொறுத்து மீண்டும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது பற்றி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டன மறுஅறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக, சென்னை திருவாரூர், தஞ்சை, திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம்...திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர்,வேலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய 16 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரப்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு வினாடிக்கு 1500 கன அடியில் இருந்து 3000 கன அடியாக அதிகரிப்பு. #CycloneNivar
— AIADMK (@AIADMKOfficial) November 25, 2020
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாலை நிலவரப்படி கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
புதுச்சேரியைச் சுற்றியுள்ள காரைக்கல் மற்றும் மாமல்லபுரம் இடையே 25 ஆம் தேதி நள்ளிரவு மற்றும் 2020 நவம்பர் 26 அதிகாலை நேரங்களில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக 120-130 கிமீ வேகத்தில் 145 கிமீ வேகத்தில் காற்று வீசும். IMD
— TN SDMA (@tnsdma) November 25, 2020
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதிகளிலுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் “நிவர்” புயல் தொடர்பான பணிகளை கண்காணிக்கவும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்கவும் கூடுதல் கண்காணிப்பாளராக V.அருண் ராய், இ.ஆ.ப.சிறப்பு செயலர்-தொழில்துறை அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
— TN SDMA (@tnsdma) November 25, 2020
நிவர் புயலை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும், அவரசர உதவிக்கு அவர்களை அணுகும்படியும் சென்னை மாநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Greater Chennai Police message:#chennaicitypolice#greaterchennaipolice#chennaipolice pic.twitter.com/OAVSMHSuyd
— GREATER CHENNAI POLICE (@chennaipolice_) November 25, 2020
சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நிவர் புயல் காரணமாக நாளை பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி அறிக்கைவிடுத்துள்ளார்.
தீவிர நிவர் புயல் தற்போது சென்னைக்குத் தென் கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கு தென் கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் கடலூரிலிருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலை மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரி அருகில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு N.சுப்பையன் மாவட்ட ஆட்சியர் திரு M.கோவிந்தராவ் உடன் பாபநாசம் வட்டம் களஞ்சேரி வெண்ணாற்றங்கரையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வெள்ளத்தடுப்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு N.சுப்பையன் மாவட்ட ஆட்சியர் திரு M.கோவிந்தராவ் உடன் பாபநாசம் வட்டம் களஞ்சேரி வெண்ணாற்றங்கரையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வெள்ளத்தடுப்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.#TamilNadu #NivarCyclone pic.twitter.com/XRTmnaLl5E
— AIR News Chennai (@airnews_Chennai) November 25, 2020
நிவர் புயலைத் தொடர்ந்து, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்றபடி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் பரிந்துரைத்திருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுகிறது . சுற்றியுள்ள கிராமங்களுக்கு அறிவிப்பு கொடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை . செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட உள்ளதால் திருநீர்மலை, குன்றத்தூர், முடிச்சூர், அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை. நீர் வரத்தை பொறுத்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் எனவும் அறிவிபு.
Chembarambakkam reservoir to be opened at 12 noon today. @chennaicorp alerts people living in low-lying areas to move to safe places.@CWCOfficial_FF @PIB_India @ndmaindia @NDRFHQ @satyaprad1 @ChennaiRmc @CMOTamilNadu @albyjohnV @rdc_south @SPVelumanicbe pic.twitter.com/1fBjx2JqSS
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) November 25, 2020
நிவர் புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. அதன்படி, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும்.
சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights