/tamil-ie/media/media_files/uploads/2020/11/Nivar-Cyclone-in-Chennai-3.jpg)
nivar effect palaru river flood kanchipuram
nivar effect palaru river flood kanchipuram : வங்க கடலில் உருவான நிகர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.நிவர் புயல் கரையை கடந்த பின்பு, கனமழை கொட்டி தீர்த்தது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் தமிழக எல்லையில் நுழையும் பாலாறு 222 கிமீ பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அருகே வயலூர் கிராமப்பகுதியில் கடலில் கலக்கிறது. இந்நிலையில், பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். பாலாற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காவேரிப்பாக்கம் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளதால் பாலாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள், சமுதாயகூடங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவையான அடிப்படை வசதிகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.