Advertisment

போனஸ், பணி நிரந்தரம்... கொட்டும் மழையில் என்.எல்.சி ஊழியர்கள் போராட்டம்

நெய்வேலி பெரியார் சதுக்கம் எதிரில் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
NLC Contract workers protest Neyveli Tamil News

என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வருகின்ற 18-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இங்கு சுமார் 13 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரி என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். 

Advertisment

இந்நிலையில் இன்று (அக்.14) மாலை நெய்வேலி பெரியார் சதுக்கம் எதிரில் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க சிறப்பு செயலாளர் சேகர் பேசுகையில், வருகிற 18-ம் தேதி நள்ளிரவு முதல் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.

மேலும் “19-ம் தேதி காலை என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாகவும், என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க பொதுச்செயலாளர் அந்தோணி செல்வராஜ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததை என்எல்சி நிறுவனம் திரும்ப பெற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றும் கூறினார். 

ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கொட்டும் மழையில் என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Protest Nlc Neyveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment