Advertisment

ராஜஸ்தானில் நிலம் கொடுத்த 28 பேருக்கு நெய்வேலியில் வேலை: என்.எல்.சி விளக்கம்

என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியதில் வட மாநிலத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், என்.எல்.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
NLC

என்.எல்.சி

என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியதில் வட மாநிலத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ராஜஸ்தானில் நிலம் கொடுத்த 28 பேருக்கு நெய்வேலியில் வேலை அளிக்கப்பட்டுள்ளது என என்.எல்.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியவர்களின் பட்டியலில் 28 பெயர்கள் வட மாநிலத்தவர்கள் பெயர்கள் இருந்தன. என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியவர்களின் பட்டியலில் வட மாநிலத்தவர் பெயர்கள் எப்படி இடம்பெற்றது என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்து என்.எல்.சி நிறுவனம் ஒரு விரிவான விளக்கம் அளித்துள்ளது. அதில், 28 வட மாநிலத்தவர்களுக்கு தவறாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

என்.எல்.சி-யில் 28 வட மாநிலத்தவர்களுக்கு தவறாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் மற்றும் வீடு கொடுக்காதவர்களில் 28 பேருக்கு தவறாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் என்.எல்.சி பார்சிங்சார் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் திட்டங்களுக்கு (Barsingsar Thermal Power Station) வழங்கப்பட்ட நிலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தேசிய நிறுவனமாக என்.எல்.சி இருப்பதைக் கருத்தில் கொள்ளாமலும், தொடர்பில்லாத நபர்களுக்கு, வேலை வாய்ப்பை வழங்கியதாக தங்களது நிறுவனத்தின் நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கில் தவறான செய்தி பரப்பியிருப்பதாகவும் என்.எல்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது நடந்து வரும் பதட்டமான சூழலை, மோசமாக்குவதற்காக இந்த தகவல் பரப்பப்பட்டதாக என்.எல்.சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து என்.எல்.சி நிறுவனம் கூறியிருப்பதாவது:

என்.எல்.சி நிறுவனம் இந்திய அளவிலான ஒரு நிறுவனமாக உள்ளது. என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே பணி வழங்கப்பட்டுள்ளது. வேலை பெற்ற பட்டியலில் உள்ள 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள். ராஜஸ்தானில் உள்ள பர்சிங்கார் சுரங்கங்கள், அனல் மின் நிலைய திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை கருத்தில் கொண்டு வேலை வழங்கப்பட்டது. நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் தவறான செய்தியை பரப்பி இருக்கக்கூடும்” என்று கூறியுள்ளது.

முன்னதாக, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு என்.எல்.சி வேலை வழங்கியது எப்படி? அது தொடர்பான தகவல்களை வழங்க மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Nlc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment